பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் 9 163

என்று இராமநாமத்தின் பெருமையைப் பெருமிதத்துடன் பேசுவான். இங்ங்னம் தற்கூற்றாக இராமனே பரம் பொருள் என்று காட்டும் இடங்கள் பல.

பிறர் கூற்றுகள் பரம்பொருளைக் காட்டுவனவாக அமைந்த பிறர் கூற்றுகளும் பல உள்ளன. சிலவற்றைக் காட்டுவேன்.

விராதன். இவன் தும்புருத்தன் என்ற திருநாமம் கொண்ட உம்பருலகத்துக் கந்தருவன். குபேரனது சாபத்தால் அரக்கப் பிறவியை அடைந்தவன். இராமனால் சாபம் நீங்கி இராமனைப் பதினான்கு பாடல்களால் தோத்திரம் செய்கின்றான்" இந்தப் பாடல்களில் பரம் பொருள் காட்சி காட்டப் பெறுகின்றது. பாடல்கள் யாவும் ஆழ்வார்களின் பாசுரங்களை நிகர்த்தனவாக உள்ளன. ஒரு பாடலைக் காட்டுவேன்.

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனநின் பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ ? ஒதங்கொள் கடல்அன்றி ஒன்றினோடு ஒன்றுஒவ்வா பூதங்கள் தொறும்உறைந்தால் அவைஉன்னைப்

பொறுக்குமோ"

(அறைகின்ற - துதிக்கின்ற; விரிந்தன - பரந்தன; ஒதம் - குளிர்ச்சி; ஒவ்வாத - ஒத்திராத, உறைந்தால் - வாசம் செய்தால்)

அருமறைகள் யாவும் அச்சுதனின் திருவடிப் பெருமையையே பேசுவனவாதலால் வேதங்கள் அறைகின்ற” என்கின்றான். வேதங்கள் அறைகின்ற பாதங்கள் என்று சேர்த்துப் பொருள் காணல் வேண்டும். நின்பாதங்கள் உலகெங்கும் விரிந்தன்' என்றது எம்

11. ஆரணிய - விராதன் வதை - 48-61 12. விராதன் வதை - 48