பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

பெருமான் திரிவாக்கிரமாவதாரத்தை ஏறிட்டுக் கொண்டு இப்பூமியை ஒரடியால் அளந்தபோது, அத்திருவடி உலகெங்கும் விரிந்ததை உட்கொண்டு கூறியதாகும். உலகெங்கும் விரிந்தன என்பதால் எம் பெருமானின் ‘வியாபகத் தன்மையைக் கூறியவாறாம். படிவங்கள் எப்படியோ? என்றதால் எம்பெருமானின் திருமேனிதிவ்வியமங்கள விக்கிரகம் -இத்தன்மைத்து என்று உத்தேசித்து அறிய முடியாது என்பது பெறப்படுகின்றது. அவன் மனம், மொழி, மெய்களுக்கு எட்டாதவன் என்பது குறிப்பு. ஒதங்கொள் கடல் அன்றி என்பதனால் எம்பெருமானின் வியூக நிலை சுட்டப்பெறுகின்றது. இன்னும் இது தனியே எடுத்துக் கூறப் பெற்றதால், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மீது கண் வளர்தலும், பிரளயகாலத்துப் பெருங்கடலில் ஆலிலையில் பள்ளி கொள்ளுதலுமாகிய சிறப்புத் தன்மையைக் காட்டுவன வாகும் எனலாம், பூதங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்) ஆகியவை. இவை ஒன்றினோடு ஒன்று ஒவ்வா? நிலம் நிலையாயிருத்தலும் கந்தம் உடையதாதலும், குளிர்ந்த உணர்வுடையதாதலும் குறிக்கப் பெறுகின்றது. நெருப்பு-மேல் நோக்கி எரிதலும் சுடும் உணர்ச்சி உடையதாதலும் சுட்டப் பெறுகின்றது. காற்று-பத்துத் திக்குகளிலும் வீசுதலும், உருவமின்றி உணர்வூட்டுதலும் உணர்த்தப் பெறுகின்றது. விசும்பு-எங்கும் பரவியிருத்தலும் சப்த குணமுடையதாதலும் காட்டப் பெறுகின்றது. இவ்வாறு தன்மை வேறுபாடுகள் உடையதாதல்பற்றி 'ஒன்றினோடு ஒன்று ஒவ்வா' என்று சுட்டப் பெற்றன. கடல் நீருள்ளான் என்றவாறு ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றன் சொருபமான கடலில் மாத்திரமேயன்றி ஏனைய பூதங்களிலும் நீ உறைந்தால், "அவை உன்னைப் பொறுக்க வல்லன" என்பதானால் அவற்றையும் நீ தாங்குகின்றாய்