பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

சிறப்பாகப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன என்பதையும் சுட்டிக் காட்டினேன்.

இரண்டாவது பண்பாடாக சகோதரன் வாஞ்சையை' எடுத்துக் கொண்டு மனிதர்களில் இராமன்-இலக்குவன், பரதன்-சத்துருக்கனன், இவர்களின் சகோதர வாஞ்சையை திகழ்ச்சிகளுடன் பொருத்திக் காட்டும் சான்றுகளுடன் விளக்கினேன். வானரர்களில் வாலி-சுக்கிரீவனின் சகோதர வாஞ்சையைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டினேன். அரக்கர்களில் இராவணன்-கும்பகருணன், இராவணன்-வீடணன், கும்பகருணன்-வீடணன், இந்திரசித்து-அட்சய குமரன், இந்திரசித்து-அதிகாயன இவர்களின் சகோதர வாஞ்சைகளைச் சான்றுகளுடன் புலப்படுத்தி விளக்கினேன். இந்த வாஞ்சைகள் யாவும் ஒருவர் இறந்தபின் மற்றவர் புலம்பும் குரல்களில்தாம் தெளிவாகின்றன என்ற சிறப்பையும் சுட்டிக் காட்டினேன்.

மூன்றாவதாக மக்கள் பண்பாடுகளாகக் காணப் பெறும் பலவற்றில் (!) அன்புடைமை, (2) கற்பு, (3) விருந்தோம்பல், (4) செய்ந்நன்றியறிதல், (5) ஈகை என்ற ஐந்தை மட்டிலும் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் கம்பன் காவியத்தில் வரும் இடங்களைச் சுட்டி விளக்கினேன். அன்புடைமைக்கு குகன், இராமனுடன் கொண்ட தொடர்புகளைச் சுட்டும் போக்கில் நிகழ்ச்சிகள் விரிவாக விளக்கப் பெற்றன. சுக்கிரீவனையும் தொட்டுக் காட்டினேன். கற்பு என்னும் பண்பு சீதாப்பிராட்டியின் வாழ்க்கையில் நேரிட்ட பல நிகழ்ச்சிகள்மூலம் விளக்கி சீதை அசோக வனத்தில் தவம் செய்த தவமாக இருக்கும் நிலையை இராமன் காணமுடியவில்லையே என்று அதுமன்,

மாண நோற்று ஈண்டுஇவள்

இருந்த வாறெலாம்