பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

முடிப்புரை

பெரியோர்களே,

இதுகாறும் பேசியவற்றைச் சுருக்கமாகக் கூறி என் பேச்சை முடிப்பேன். என் உரையின் முன்னுரையாக கம்பன் வைணவனா? என்ற வினாவை எழுப்பி அவன் வைணவன் என்று தக்க சான்றுகளுடன் உரைத்தேன். அவன் சைவனும் அல்லன், சமரசவாதியும் அல்லன், என்பதையும் காட்டினேன். அவன் சமயம் பொறை நிறைந்த ஒரு மானிடன் என்பதை உறுதிப்படுத்தினேன். இதே முன்னுரையில் மனிதப் பண்பாடு இன்னது என்பதை விளக்கி என் பொழிவுக்கு அடித்தளம் அமைத்தேன். காவிய நடைபற்றியும் குறிப்புகள் தந்தேன்.

முதல் பண்பாடாக மக்கட்டாசம் என்பதை எடுத்துக் கொண்டு தசரதன், கோசலை, கைகேயி, சுமித்திரை, இராவணன், தானியமாலினி, மண்டோதரி என்பவர்களின் மக்கட்பாசத்தைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டினேன். குழந்தைகளால் பெறும் இன்பத்தைப்பற்றி ஏன் கம்பன் பாடல்களைப் பாடவில்லை என்பதற்கு யான் கருதும் காரணத்தை உங்கள் முன் வைத்தேன். ஆனால் ஒருவர் இறந்தபோது ஏற்படும் துயரம்பற்றி அற்புதமான பாடல்கள் இயற்றியுள்ளதற்கும் நான் கருதும் காரணத்தையும் உங்கள் முன் வைத்து இப்பாடல்களே மக்கட்பாசத்தைப் பற்றி