பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கொன்று அழித்துவிட, இறுதியில் வெறும் மண்ணுலக மாய்த் தோன்றி அழிந்து விடும்.

உலகம் என்பது என்ன? வெறு மண்ணா? மண்ணில் கலந்துள்ள மற்றப் பூதங்களா? மரம் செடிகொடியாக உள்ள மண்ணா: எலும்பாகவும் தசையாகவும் உள்ள மண்ணா? மூளையாகவும் நரம்பாகவும் உள்ள மண்ணா பண்பு என்ற ஒன்று இல்லையானால், இவ்வுலகம் எவ்வாறு தோன்றும்? மண்ணில் வளர்ந்த புழுக்களுள் மக்கள் உடல்கள் பெரு வகைப் புழுக்கலாய்த் தோன்றும் அந்தப் பெரு வகைப் புழுக்கன் தம்மைவிட மெலிந்த (மக்கட் புழுக்களை வகுத்தியும் பொருதும் கொன்றும் வாழ்வதாகத் தோன்றும், இன்னும் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தால், மண்ணில் சிலபகுதிகள் அசைவும் எழுச்சியும் பெற்று ஒன்று மற்றொன்றைத் தாக்கி மண்ணாய் மாய்வதாகத் தோன்றும் அன்றோ? அவ்வாறு வெறு மண்ணாகவோ, நரம்பு மூளை முதலிய உயர்வகை மண்ணாகவோ தோன்றாமல் உண்மைப் பெருமையுடைய உலகமாகத் தோன்றச் செய்வது நெஞ்சப் பண்பு ஒன்றேயாகும். அத்தகைய நெஞ்சப் பண்பு உடையவர்கள் ஒரு சிலரேயாயினும் அவர்களால்தான் உலகம் உலகமாய் உள்ளது என்பது வள்ளுவர் பெருமானின் கருத்து என்பது பெறப்படும். 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்ற பொன் மொழியையும் ஈண்டு சிந்திக்கலாம். இத்தகைய பண்புடையவன்தான் மனிதன்-மானுடன்.

உயர்திணை என்மனார்

மக்கட் சுட்டே'

என்று தொல்காப்பியர் ஒருபடி மேலே சென்று இவ்வாறு கூறுவர். மக்களாக நன்கு மதிக்கப்பெறுபவர்களே

22. தொல், சொல். கிளவியாக்கம். 1