பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 13

பண்பாடு என்பது என்ன?

பண்பெனப் படுவது

பாடறிந்து ஒழுகல்

என்கின்றது கலித்தொகை, பண்பாடு என்பது இயற்கையாக அமைந்த பண்பு அல்ல. மனித பரம்பரை பொதிந்து வைத்துள்ள எழுத்துச் செல்வங்களைக் கற்றதனால் வருவது. பண்புடைமை என்னும் குணம் பெருமை, சான்றாண்மை களில் வழுவாது நின்று எல்லாருடைய இயல்புகளும் அறிந்து ஒழுகுதலாகும் என்பர் பரிமேலழகர்" வள்ளுவர் பெருமானும்,

19

பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்'.

என்று காட்டுவர். நீதியையும் அறத்தையும் விரும்பும் தன்மையே மக்கட்பண்பு என்பது. இவற்றை விரும்புகின்ற வர்களே உலகிற்குப் பயன்படுவார்கள். அவர்கள் பண்பையே உலகமும் பாராட்டும். இத்தகையோர் இருப்பதால்தான் உலக வாழ்க்கை உண்டு என்று சொல்லக் கூடியதாய் நடைபெறுகின்றது. இல்லையென்றால் உலகம் வெறும் மண்ணாய் நின்று அழியக் கூடியதாகும். உலகத் தோற்றம் மண்ணும் கல்லுமாக உள்ளது. மற்ற பூதங்கள் இருப்பினும் மண்ணே அதன் புறத் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. மற்றப் பூதங்கள் இருப்பதைவிட, மற்ற உயிர்கள் இருப்பதைவிட, மக்கள் வாழ்வதே மண்ணுலகத்தின் சிறப்பிற்குக் காரணமாகும். மக்கள் பண்பு இன்றி, விலங்குகளைப் போல், மரங்களைப் போல் மக்கள் வாழ்க்கை நடத்தினால், ஒருவரையொருவர்

19. கலி - 133.

20. திருக்குறள், பண்புடைமை - அதிகார விளக்கம். 21. மேற்படி, பண்புடைமை - 5 (995)