பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்று குறிப்பிடும் இராமாயணத்தின் தற்சிறப்பும் பாயிரம். 'தடையில் நின்றுயர் நாயகன் என்ற அடியின் முறை சிந்திக்ககத்தக்கது. உலக உண்மைகளை யெல்லாம் மனிதமனம் உணரக் கூடியவாறு தன் மந்திரச் சொல்லால் உள்ளம் மயங்கச் செய்திடும் ஆற்றல் பெற்றவன் கம்பநாடன், இதனால் வைணவப் பெருமக்கள்

இராமனது மெய்யும் கிருஷ்ணனது பொய்யும் நமக்குத் தஞ்சம் என்று சொல்லிவைத்தனரோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. நடையில் நின்றுயர் நாயகன் திருக்கதையை மனிதப் பண்பாட்டை மையமாகக் கொண்டு சித்திரிக்கின்றான் என்றும் கருதலாம். அரக்கர், முனிவர், குரக்கா, வேடர், பறவை முதலியோரின் நெஞ்சங்களையெல்லாம் மனித நெஞ்சங்களாகமாற்றிக் காட்டும் ஆற்றல் பெற்றவன் கம்பன்.

அரக்கர் நெஞ்சறிவான்-முனிவர்

அகமும் கண்டறிவான் குரக்கின்உள் ளறிவான்-வேடர்

குணமும் நன்கறிவான் தீது நன்மையெல்லாம்-ஆராய்ந்து தெளியச் சொல்லிடுவான் வாதில் பிரதிகளின்-வழக்கை

வரைந்து காட்டிடுவான்" என்று தெளிந்து உரைத்திடுவார் கவிமணி, செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்" அல்லவா?" இதனால்தான் இராம காதையில் பண்பாட்டின் கொடுமுடிகளைக் காணமுடிகின்றது.

17. தேவி, மலரும் மாலையும் - கம்பர் 10,11 18. புத்த ஊர்தேடு - 133