பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 11

தேனகு தெரியல் மன்னா!

சேகறத் தெரிந்த தன்றே."

'எந்தையே, நான் முகன் படையும் தீண்டாதிருத்தலால் அந்த இராமன் சாதாரண மனிதன் அல்லன்; தேவ சாதியானும் அல்லன்; வீடணன் உண்மையாகச் சொன்ன அகப்பற்று புறப்பற்று அற்றுவர்களான யோகியர் தியானிக்கின்ற ஒப்பற்ற கடவுள் என்றே ஐயமறத் தெரிந்தது' என்கின்றான்.

பல பாடல்களில் வைணவ தத்துவக் குறிப்புகள் காணப்படுகின்றனவேயன்றி எந்த ஒரு பாடலிலாவது சைவ சித்தாந்தக் குறிப்புகள் காணப் பெறவில்லை என்பதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.

இக்கூறியவற்றால் கம்பன் கருத்தில் இராமனே பரம் பொருள் என்பது உறுதிப் படுவதால் கம்பன் ஒரு சிறந்த வைணவன் என்பது தெளிவாகின்றது. இத்துடன் இதனை நிறுத்தி என் தலைப்புக்கு வருகின்றேன்.

  • 莺 *

மனிதப் பண்பாடு:

கற்றார் இராம பிரானை அல்

லால்மற்றும் கற்பரோ?' என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு இந்த இராமகாதையை, நடையின் நின்றுயர் நாயகன் தோன்றத்தின்

இடைநிகழ்ந்தஇ ராமாவதாரப்பேர் தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை

14. யுத்த. மாயா சீதை - 13. 15. திருவாய் 7.51 - 16. கம்பரா, தனிசிறப்பு - 11