பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கடவுளான நாராயணப்பொருள். வினை கடந்தவர் ஆராய்ந்தாலும் அவர்கட்குத் தெரியாததான ஒப்பற்ற பெருமையினுள் மறைந்திருப்பவர்கள். நாம் பாராயணம் செய்யும் மறை நான்கிற்கும் அப்பாற் பட்டவர்கள். புராண புருடர்கள்' என்கின்றார்.

இவை மட்டுமா? இந்திரசித்தின் கருத்திலும் இராமன் பரம்பொருளாகக் காட்சி அளிக்கின்றான். நிகும்பலை வேள்வியை முடிக்கக் கருதிய இந்திரசித்து பகைவர்களின் கவனத்தை வேறு பக்கத்தில் திருப்பக் கருதுகின்றான். சஞ்சீவி பருவதத்தை இருந்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டு மீண்டு வந்த அநுமன் இலங்கை மாநகரின் மேற்குவாயிலிலிருக்கும்போது மாயையால் தான் படைத்த சீதையை வெட்டி வீழ்த்துகின்றான். இச்செய்தியறிந்த இராமன் முதலியோர் துயர்க்கடலில் ஆழ்ந்து விடுகின்றனர். வீடணன் வண்டின் உருவங் கொண்டு அசோகவனம் சென்று சீதையைக் கண்டு இந்திரசித்து செய்தது வஞ்சகமான செயல் என்பதைத் தெரிவிக்கின்றான்.

இந்நிலையில் இந்திரசித்து தந்தையைத் தனிமையில் சந்தித்து இராமலக்குமணர்களைப் புகழ்கின்றான். பின்னர் தான் நிகும்பலை வேள்வியை வெற்றியுடன் முடித்தால் தந்தையின் துயர் தீரும் எனத் தெரிவிக்கின்றான். இந்திரசித்தன் இராமலக்கும்னர்களைப் புகழும் பாடல்

மானிடன் அல்லன் தொல்லை

வானவன் அல்லன் மற்றும்

மேனிவர் முனிவன் அல்லன்

வீடணன் மெய்யில் சொன்ன

யான்எனது எண்ணல் தீர்ந்தார்

எண்ணுதும் ஒருவன் என்றே