பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பாசம் 25

அருமையாக உயிர் மீளுகின்றது. பெருமூச்சு விட்டுக் கொண்டு பலவகையாகப் புலம்புகின்றான்” என்கின்றான் கம்பன். புலம்பலை ஏழு கவிகளால் புலப்படுத்துகின்றான்: அனைத்தும் உள்ளத்தை உருக்கும் பாடல்கள்.

"கலைக் கோட்டுமாமுனிவன் இயற்றிய வேள்வியால் என்னை மகனாகப் பெற்றாய். அதனால் நீ பெற்றது உயிர் நீங்கிப் போவதற்குதானோ?” என்கின்றான். உள்ளத்தை உருக்கும் ஒருபாடல்:

தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக்

கானடைந்தேன் என்னத் தரியாது காவலநீ

வானடைந்தாய்; இன்னம் இருந்தேன்நான்

வாழ்வுகந்தே"

என்பது. "நான் கானம் அடைந்தேன் என்ற செய்தி கேட்டு அதனைத் தாங்கமுடியாது வானுலகம் சென்றுவிட்டாய். நீ திருநாடு அலங்கரித்தாய் என்று கேட்டும் இன்னும் வாழ்க்கையை விரும்பி வாழ்கின்றேன். இஃதென்ன இரக்கமின்மை?" என்கின்றான். இதனாலும் தசரதனின் பிள்ளைப் பாசம் புலனாகின்றது.

அட்சய குமாரனை அநுமன் கொன்றொழிக் கின்றான். இதனைக் கவிஞன் "அநுமன் பெருவெள்ளமாகப் பெருகியோடும் குருதியே நீராகவும், போர்க்களமே அம்மிக் கல்லாகவும், அட்சயனின் தசையே அரிசியாகவும், அவனுடைய தசை நீங்கிய உடற்பகுதியே குழவியாகவும் கொண்டு மண்ணோரும் விண்ணோரும் காணும்படி அரைத்துத் தேய்த்து ஒழித்தான்" என்கின்றான். இதனைச் செவியுற்ற மண்டோதரி அழுகின்றாள். தாய்ப்பாசம் இது. இராவணன் வருந்தியதாகச் செய்தி இல்லை.

11. அயோத், திருவடி சூட்டு. 65 12. கந்தர - அட்சய குமாரன் வதை - 38.