பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வருந்துகின்றான் தசரதன். இவை யாவும் பிள்ளைப் பாசத்தை விளக்குகின்றன: மக்கட் பாசத்தை விளக்கும் குலசேகராழ்வாரின் ஒரு பாசுரத்தைக் காட்டி மேற் செல்வேன்.

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கெளசலைதன்

குலமதலாய் ! குனிவில் ஏந்தும் வல்லணைந்த வரைத்தோளா ! வல்வினையேன்

மனமுருக்கும் வகையே கற்றாய் மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்

வியன்கான மரத்தின் நீழல் கல்லனைமேல் கண்துயிலக் கற்றனையோ

காகுத்தா கரிய கோவ்ே' இராமனின் அரண்மனை வாழ்க்கையும் கானிலுறையும் தவவாழ்ககையும் ஒரு சேர நினைத்துத் தந்தையின் உள்ளம் உருகுவதைக் காட்டுகின்றது இவ்வரிய பாசுரம்,

இராமனைத் திரும்பவும் அயோத்திக்குக் கூட்டிக் கொண்டு வந்து அரசாளச் செய்ய வைக்கலாம் என்ற நோக்கத்துடன் பரதன் சேனையுடன் காட்டிற்கு வருகின்றான், அப்போது தந்தை திருநாடு அலங்களித்த செய்தியை அறிகின்றான் இராமன். உடனே அவன் அடைந்த நிலையை,

இருநிலஞ் சேர்ந்தனன் இறைஉ யிர்த்திலன்; உருமினை அரவென உணர்வு நீங்கினான் அருமையின் உயிர்வர அயர்வு யிர்த்துஅகம் பொருமினன் பன்முறைப் புலம்பி ன்ான்.அரோ?" என்ற பாடலால் புலப்படுத்துகின்றான் கவிஞன். "இராமன் பூமியில் விழுகின்றான்; மூச்சுடங்குகின்றது; இடியினால் வருந்துகின்ற அரவுபோல உணர்வு இழக்கின்றான். பின்பு

9. பெரு. திரு. 9.3 10. அயோ. திருவடி சூட்டு. 59