பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பாசம் , 23

பன்னிரண்டு பாடல்களில் . "என் கண்ணிரண்டும் நீர்மயமாகி ஆறாய்ப் பெருக, என் உயிரும் நீங்கப் போகின்றது. வேதமந்திரங்களைச் செபித்து ஓமம் செய்து உனக்கு நீராட்டும் பொருட்டு கங்கை முதலிய புண்ணியநதிகளிலிருந்து கொண்டு வந்துள்ள நீரை இறந்து விட்ட எனக்குத் தர்ப்பண நீராய்க் கொடுத்துப் பின் கானகம் செல்வாய்” (56) என்று தசரதன் கூறும்போது அவன் இராமன்மீது வைத்திருக்கும் பிள்ளைப்பாசம் புலனாகின்றது,

பிறிதொரு பாடல்,

தேனகுமா மலர்க்கூந்தல் க்ெளசலையும்

சுமித்திரையும் சிந்தை நோவ கூனுருவில் கொடுந் தொழுத்தை சொற்கேட்ட

கொடியவள்தன் சொற்கொண்டு இன்று கானகமே மிகவிரும்பி நீதுறந்த

வளநகரைத் துறந்து நானும் வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்

மனுகுலத்தார் தங்கள் கோவே."

என்ற குலசேகரப் பெருமானின் திருமொழியை ஒட்டியுள்ளது. பல பாடல்கள் பெருமாள் திருமொழியை யொட்டியே அமைந்துள்ளன. "நீ மணி முடிசூடி வெண் கொற்றக் கொடி நிழற்றப் பேரணி நலம் பூண்டு அரியணையில் இலக்குமி தங்கும் மார்போடு வீற்றிருக்கக் காணுதற்குரிய யான், அதற்கு மாறாய் மரவுரிதரித்து மான்தோல் போர்த்துச் சடைமுடியுடன் இருக்கும் தவக் கோலத்தைக் காணாது வானுலகம் சேர்தல் எனக்கு நேருமாயின் அதுவே எனக்கு நன்று (6) என்று

7. அயோத்தி - நகர் நீங்கு - 56-66 8. பெரு. திரு. 9:10