பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

ஊனக் கண்ணுக்குப் புலனாகாதவர்கள்; கவிஞனின் மனக்கண்ணுக்குல் புலனாகின்றவர்கள். முன்னால் வருபவர் விதி; அனைத்தையும் ஆட்டிவைக்கும் பேராற்றலுட்ைப ஊழ். 'இழைக்கின்ற என்ற சொல் விதியின் போக்கையும் ஆற்றலையும் உணர்த்துகின்றது. பின்னால் வருகின்றவர் தருமம்'; இந்த உலகில் நடை முறையில் அடிக்கடிப் பல்வேறு சோதனைக்குள்ளாகும் அறம், அவர் பரிதாபநிலையில் தள்ளாடித்தள்ளாடி வந்து கொண்டிருக்கின்றார். ‘ஏக' என்ற சொல் அதனை உணர்த்துகின்றது. விதிமுன்செல்ல என்பதிலுள்ள செல்ல' என்ற சொல் விதிபெருமிதத்துடன் நடந்து போவதைக் காட்டுகின்றது. செல்ல', 'ஏக' என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளுடையனவாயினும், இப்பாடலில் வெவ்வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்துவதை அறிந்து தெளியலாம். செல்ல என்பதில் விதியின் உரிமையும் செல்வாக்கும் பீடுநடையும் புலப்படுத்துவதாகவும், ஏக என்பதில் தருமத்தின் தோல்வியும் சோர்வும் பரிதாபநிலையும் புலப்படுத்துவதாகவும் அறிகின்றோமல்லவா? கவிதை யிலுள்ள சொற்களுக்கு அப்பாற்பட்ட பொருள்கள் தோன்றும் காரணமாகவே ஒரே கவிதை பலருக்குப் பலவிதமான அநுபவங்களைத் தருகின்றது. இதனால்தான் ஒரே கவிதைக்கும் பல்வேறு உரைகள் தோன்றுகின்றன. திருவாய்மொழிக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் தோன்றினதற்கும் திருக்குறளுக்குப் பல உரை வேற்றுமைகள் தோன்றினதற்கும் இதுவே காரணமாகும் என்று கருதலாம். இங்ங்ணம் பல்வேறு நோக்குகளால் பாடலின் போக்குகளும் வேறாகிக் கோசலையின் பிள்ளைப் பாசத்தைப் புலப்படுத்துவதை அறிகின்றோம்.

இன்னோர் இடம், இராமன் கானகம் செல்வானேயன்றி முடிசூடிக் கொள்ளான் என்று கோசலை கூறியதைக் கேட்டு தசரதன் புலம்பத் தொடங்குகின்றான்.