பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிக்கட் பாசம் 27

பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ? சீதையால் இன்னம் வருவ சிலவேயோ ?

உம்பி உணர்வுடையான் சொன்ன உரைகேளாய் நம்பி குலக்கிழவன் கூறும் நலம்ஒராய் கும்ப கருணனையும் கொல்வித்து என்கோமகனை அம்புக் கிரையாக்கி ஆண்டாய் அரசுஐய

என்ற பாடல்களில் புலம்புவது பிள்ளைப் பாசத்தைச் சுட்டுவதுடன் இராவணனின் பெரியோர் அறவுரையைக் கேளாத்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றாள். தவிர, இவை பிராட்டியால் இன்னும் வரும் துன்பங்களையும் முற்கூறுவதாகவும் அமைகின்றன.

மருத்து மலையைக் கொணர்ந்து மாண்டவர்களைப் பிழைப்பிக்கச் செய்த அநுமன் இலங்கையின் மேற்கு வாயிலில் இருந்தபோது இந்திரசித்து அவன் கண்முன் மாயா சீதையை வெட்டிவீழ்த்தி இராமன் பக்கம் ஒரு கலக்கத்தை உண்டாக்கி நிகும்பலை யாகம் செய்யத் தொடங்குகின்றான். வீடணனால் இதனையறிந்த இராமன் இலக்குவனை வீடணனோடும் வானர சேனையுடனும் அனுப்ப, அவர்கள் சிவ பூசையில் கரடி புகுந்தமாதிரி புகுந்து யாகம் முற்றுப் பெறாமல் குலைக்கச் செய்கின்றனர். இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் இடையே நடந்த போரில் இந்திரசித்து கொல்லப்படுகின்றான்

மகன் மறைந்த செய்தி இராவணனுக்கு எட்டுகின்றது. புத்திர சோகம் பிடர் பிடித்து உந்த கோபக் கனல் பொங்கி எழுகின்றது. பின்னர் சினம் அடங்கப் புலம்பி அழுகின்றான். நான்கு பாடல்கள் அவன் புலம்பலைக் காட்டும்', 'மைந்தனே! என்பான்; சிறந்த மகனே என்பான்;

14. கம்பரா. யுத்த, அதிகாயன் வதை - 271-273. 15. இராவணன் சோகம் - 10-13.