பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

அங்கும் பலவாறு புலம்புகின்றான். ஐந்து பாடல்கள் புலம்பலைப் புலப்படுத்துகின்றன. முத்தாய்ப்பான ஒரு பாடல்.

எனக்குநீ செய்யத் தக்க

கடனெலாம் ஏங்கி ஏங்கி உனக்குநான் செய்வ தானேன்

என்னின்யார் உலகத் துள்ளார்"

பின்னர் இராவணன் தன் மகன் உடலுடன் இலங்கை

நகர்புகுகின்றான். இந்நிலையில் மண்டோதரி தன் மகன் மீது மலையின்மீது மயில் வீழ்ந்தென்ன மைந்தன் மீது மறுகிவீழ்ந்து (45 புலம்புகின்றாள், எட்டுப் பாடல்கள் இப் புலம்பலைப் புலப்படுத்துகின்றன."

கலையினால் திங்கள் போல

வளர்கின்ற காலத் தேஉன்

சிலையினால் அளியை வெல்லக்

காண்பதோர் தவமுன் செய்தேன்.

தலையிலா ஆக்கைக் காண

எத்தவம் செய்தேன் அந்தோ (47)

தாளரிச் சதங்கை ஆர்ப்பத்

தளர்கின்ற பருவந் தன்னில் கோளரி இரண்டு பற்றிக்

கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி மாட

முன்றிலின் முறையி னோடு மீளரும் விளையாட்டு இன்னம்

காண்பனோ ? விதியி லாதேன் (49) 17. இராவணன் சோகம் - 39. - 18. மேற்படி - 46-53.