பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பாசம் & 33

பாடல்களை மீண்டும் மீண்டும் படிக்கின்றோம்; அழுது கொண்டே படிக்கின்றோம்; இப்பாடல்களை அடிக்கடிப் படிக்கவும் ஆசைப்படுகின்றோம்.

இவ்விடத்தில் சுவை பற்றிய ஒரு சிறு குறிப்பையும் உங்கள் முன் வைக்க ஆசைப்படுகின்றேன். சுவைகளை நகை, அழுகை, உவகை (காதல்), வெகுளி, பெருமிதம், அச்சம், இழிவரல், மருட்கை (வியப்பு என எட்டு வகையாகப் பிரித்துப் பேசும். வடமொழிவாண்ர்கள் சாந்தம் (அமைதி என்ற ஒரு சுவையையும் சேர்த்து சுவையை ஒன்பதாகக் கொள்வர். தமிழர்கள் எண்சுவை' என்பர். வடநூலார் நவரசம் என்பர். எல்லாச் சுவைகளும் நல்லறிவாளர் உள்ளத்தில் தோன்றி இன்பத்தை விளைவித்தலால் அவை சுவை என்ற திருநாமமும் பெற்றது. ஆதலால் ஒரு சுவைக்குக் கூறும் இலக்கணம் எல்லாச் சுவைகட்கும் பொருந்துவனவாக அமையும்.

சுவைகளைப் பற்றிய நிறைய செய்திகள் உண்டு அவற்றையெல்லாம் ஈண்டு விரித்துரைக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் வற்புறுத்த விரும்புகின்றேன். உலகியல் நிகழ்ச்சிகள் சுவையன்று என்பதுதான் அது.

உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன்பத்தை சுவை ரசம் என்று கொள்ளுதல் பொருந்தாது. காரணம், ஒரு சுவைக்குக் கூறும் இலக்கணம் எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை. உலகியல் செயல்களுள் நகை, உவகை (காதல், மருட்கை (வியப்பு) ஆகியவற்றை விளைவிக்கும் செயல்களில் இன்பம் உண்டாதல் போல் அழுகை, இழிவரல், அச்சம் வெகுளி முதலியவற்றினால் உண்டாகும் செயல்களில் இன்பம் உண்டாதல் இல்லை. இதனால் சுவை இலக்கண நூலார் உலகியல் இன்பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்திலாவது காவியத்திலாவது அச்செயல்கள் நிகழும்