பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

போது அவற்றைக் காண்டலும் கேட்டலும் முதலிய வற்றால் உண்டாகும் இன்பத்தையே சுவை (ரசம் என்று அறுதியிட்டனர். உலகில் ஒருதாய் தன் இளமகன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங்ககால் நமக்குத் துயரம் உண்டாகின்றது. ஆனால் மேக நாதன் இறந்து பட்டபோது மண்டோதரி புலம்புவதாக உள்ள பாடல் களைப் படிக்கும்போது, அல்லது படிக்கக் கேட்கும்போது அளவிலா மகிழ்ச்சி உண்டாகின்றது. அவலத்திலும் இன்பத்தைக் காண்பதால்தான் அப்பாடல்களைப் பன்முறை படித்தும் கேட்டும் இன்புறுகின்றோம் கண்ணிர்ப் பெருக்குடன் அழுது கொண்டே இன்புறுகின்றோம்.