பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 59

கூறிய சொல்லை இன்று இப்பொழுது தான் எண்ணப் போகின்றாயோ?” (220)

"திசையானைகள் நிலை பெயர்ந்து ஓடுமாறு செய்தவனே! ஆராய்ச்சி யின்றி ஒருவன் உயிர்போல் விருப்பிற்குரிய உயர்குடிப் பிறந்த பெண்மீது கொண்ட காதல் நிரந்தரப் பழியை விளைவிக்கும் என்று கூறினேன். அப்போது என்மீது நீ கொண்டசினம் தணிந்து இப்போது அந்த உண்மையை அறிந்தாயோ? போரிலே விருப்பங் கொண்டு எழுந்த அரக்கரின் குலம் முழுவதும் இறக்கவும் மேன்மேல் வளர்கின்ற பேராசை நீங்கியதோ?’ (22,

"குன்றை யொத்த நெடிய தோளையுடையவனே! 'அக்காலத்து எரியில் நுழைந்த வேதவதி என்பவளே உலகுக் கெல்லாம் ஒப்பற்ற தாயான இவள் காண்' என்று கூறினேன். அதனை மனத்தில் கொள்ளமாட்டா தவனானாய். உன்னுடைய குலமெல்லாம் போரில் இறந்து விழுதலைக் கண்டும் இராமபிரானிடம் உறவு பூண்டு ஒற்றுமையாயிராமல் இறந்திட்டாயே! இராகவனது புயவலியை இன்று நேரே கண்டறிந்து உயிர்நீங்கினாயே" (222).

"நான்முகனும் சிவபெருமானும் தந்தருளிய வரங்கள் பத்து முடிகளோடும் பொடியாகி உதிர்ந்து போயின. நீ பிராட்டியைக் கவர்ந்த அன்று இராமனைப் பற்றி அறியவில்லையாயினும் வானாட்டை அணுகி நின்ற இன்றாவது உணர்ந்தனையோ இராமனார் யாவர்க்கும் தலைவராதலை?” (223).

"அருமை அண்ணனே, நீ வீரர்செல்லும் நாட்டை அடைந்தாயோ? நான்முகன் நாட்டை நணுகினாயோ? பிறை சூடும் பெருமானின் நாட்டை அடைந்தாயோ? காலனும் கண்டு அஞ்சுகின்ற உன் உயிரை அஞ்சாமல் கொண்டு அகன்றவர் யார்? அஃதெல்லாம் இருக்கட்டும்: