பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் & 77

கரிய மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு மின்னற்கொடி விளங்குவது போல கருநிறத்து அரக்கியர் குழுவினிடையே கருநிறத்து அழகனுக்கு அமைந்த காந்தையை'க் கான்கின்றான் மாருதி. மாசு படிந்த இரத்தினம் போன்றவளும், பகலவன்முன் சந்திரன்போல் ஒளி மழுங்கியுள்ளவளும் அழுக்குப் பிடித்த கூந்தலை உடையவளுமாகிய இப்பெருமாட்டியைக் காணும்போதே இவளது கற்பும்காவலும் கேடுறவில்லை என்று உறுதி கொள்ளுகின்றான்' இப்பிராட்டி தோன்றியதனால் உயர் குடிப்பிறப்பும் பெண் பிறப்பும் போல் நாணமும் நோற்று உயர்ந்தது என்று கருதிய அநுமன்,

மாணநோற்று ஈண்டுஇவள் இருந்த வாறெலாம் காணநோற்று இலன்அவன் கமலக் கண்களால்

என்று இவள் நிலையை நேரில் கானும் பேறுபெற்றிவையே இராமன் என ஏங்குகின்றான். நேரில் இராமனைக் கண்ட போது அநுமன்,

கண்டனன் கற்பினுக்கு

அணியைக் கண்களால்"

என்று கூறுவான். இதனையே பின்னும்

கலங்குதென் திரையிற் றாய

க்ண்ண்ன்நீர்க் கடலில் கண்டேன்’ என்று சொல்லுவான். கற்பு கெடாதநிலையை மிகவும்

உருக்கமாக,

25. சுந்தர. காட்சி - 68 26. மேற்படி - 73 27. சுந்தர. திருவடிதொழுத - 58 28. மேற்படி - 68