பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

தன்பெருந் தனையை என்னும்

« «» • ... x 22 தகைமைககும தலைமை சானறாள

என்ற அநுமனின் வாக்கால் புலப்படுத்துகின்றான் கம்பன்.

சீதையின் தோற்றத்தைக் கொண்டே அவளது கற்பு கெட்டழியவில்லை என்று சிந்திக்கின்றான் அநுமன். பிராட்டி பல திங்களாகியும் தனது நாயகனின் கருணையைப் பெறாமல் மிகவும் மெலிந்த நிலையில் இருந்தாள்.

மென்ம ருங்குல்போல் வேறுள

அங்கமும் மெலிந்த்ாள்"

என்பது கவிஞனின் வாக்கு. பிரிவுத் துயரால் உறக்கமின்றியும் நீராடுதல் முதலியன இன்றியும் மேனி மழுங்கிக் கிடக்கின்றாள் (4). பிராட்டியின் கண்கள் எப்பொழுதும் இடையறாது நீர்மழையைப் பொழிதலால் அவளுடைய கண் மழைக்கண்' என்ற காரணப் பெயர் பெற்றது (6). ஒற்றையாடையுடன் பல நாட்கள் நீராடாமையால் えpffa労 படிந்த மேனியோடும் காணப்பட்டாள். இந்நிலையைக் கவிஞன்,

தேவு தென்கடல் அமிழ்துகொண்டு

அனங்கவேள் செய்த ஓவி யம்புகை உண்டதே

ஒக்கின்ற உருவாள்' தேவு - தெய்வத்தன்மையுடைய, தென்கடல் பாற்கடல்)

என்று நமக்குக் காட்டுவான்.

22. சுந்தர. திருவடிதொழுத - 59 23. சுந்தர. காட்சி - 3 24. மேற்படி - 11