பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 75

அல்லது, பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்' (கவு. அடிகள்) என்பது இளங்கோ அடிகளின் திருவாக்கு" சிலப்பதிகாரத்தை ஆய்ந்து கற்கும்போது மாதவியும் இந்நிலையை எய்துகின்றாள் என்பதை அறியலாம்.

உயிரினும் சிறந்தன்று நாணே நானிலும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று" என்பது தொல்காப்பிய விதி. கற்பைப்பற்றி வள்ளுவர் பெருமானும்,

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் (54)

என்று கூறுவர். மனைவியாக அமையும் பெண் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவளாய் இருக்கவேண்டும். அதோடு தன்னைத் துணையாக நம்பி மணம் செய்து கொண்ட கணவனையும் தன் தொண்டுகளாலும் ஆற்றல்களாலும் காப்பாற்றும் திறன்படைத்தவளாக விளங்கவேண்டும். மனைவியின் வல்லமை இவ்விரண்டோடு மட்டும் நிற்பதில்லை. பிறந்த குடி, புகுந்த குடி என்ற இருதிறத்து முன்னோர்களும் தேடிய புகழை மேன்மேலும் வளர்த்துக் காத்து நிலை நாட்டுகிறவளாவும் இருக்கவேண்டும். இவற்றையெல்லாம் கற்றுத் தேர்ந்து அதன் உறுதியில் நின்று துணை புரியும் ஒழுக்கமே கற்பு' என்பதாகும். இக்கருத்தை,

உன்பெருந் தேவிஎன்னும்

உரிமைக்கும் உன்னைப்பெற்ற

மன்பெரு மருகி என்னும்

வாய்மைக்கும் மிதிலை மன்னன்

20. சிலப் - அடைக்கலக் - 143-44 21. தொல். பொருள். களவியல் - 23