உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 79

விருந்தினருக்கு உதவும் பெருமை படைத்தது தான்

இல்வாழ்வான் வாழும் இல்வாழ்க்கைக் கோயில்கள்.

இதனால்தான் வள்ளுவர் பெருமான்,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (8)

என்று பணித்தருளினார்.

கோசல நாட்டு வளத்தைக் கூறும் கம்பநாடன் மள்ளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது களத்தில் குவித்த நெல்லை

‘வறிஞர்க் குதவி மிக்க

விருந்துண மனையில் உய்ப்பான்'

என்பான். மள்ளர்கள் நெற்களத்தில் நெல்லைக் குவித்துக் களப்பிச்சை முதலியவற்றை சந்திட்டுத் தமக்குரிய பகுதியை விருந்தோடு உண்ணுமாறு வீடுகளில் கொண்டு வந்து சேர்ப்பர் என்கின்றான். விருந்தைக் கூறியதனால் தென்புலத்தார் தெய்வம் ஒக்கல் என்போருக்கும் உபலட்சணமாகக் கொள்ள வேண்டும். மள்ளர்கள் மேற் கொள்ளும் விருந்தை,

முந்துமுக் கணியின் நாநா

முதிரையின் முழுத்த நெய்யில் செந்தயிர்க் கண்டங் கண்டம்

இடையிடை செறிந்த சோற்றின் தந்தம்இல் இருந்து தாமும்

விருந்தொடும் தமரி னோடும் அந்தணர் ஆறது அருத்தி ,

அயில்உறும் அமலைத்து எங்கும்

31. பாலகா. நாட்டு - 20 32. மேற்படி - 22

2