பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வாழ்க்கைத்துணை' என்று சிறப்பிக்கின்றார் வள்ளுவர் பெருமான். இல்லறங்கட்குச் சிறப்புடையது விருந்தோம்பல் ஆகும். விருந்தோம்பல் விளக்கத்தில் பரிமேலழகர் வேறாக அன்புஜட இருவர் கூடியல்லது செய்யப்படாமை' என்பர்’. தன் கணவனுக்கு உரிய செயல்களே மனைவிக் கும் உரியவை. இந்த இணக்கத் திறத்தை வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில்,

மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்ற முதற் குறளிலேயே தொகுத்துக் கூறியுள்ளார்.

கம்பராமாயணத்தில் பிராட்டி இராமனுக்குச் சரியான வாழ்க்கைத் துணையாக அமைந்தவள். இத்தகைய பெருமாட்டி,

உரிய காதலின் ஒருவரோடு

ஒருவரை உலகில்

பிரிவுஎ னும்துயர் உருவுகொண்

டால்அன்ன பிணியாள்"

என்ற நிலையில் உள்ளாள். அதாவது பிராட்டியைக் கண்டவர் இவர் பிரிவுத் துயர்கொண்டு வருந்துகின்றாள்' என உணருமாறு தோன்றுகின்றாள் இந்தப் பிரிவு நிலையிலும் விருந்தோம்பலைப்பற்றிச் சிந்திக்கின்றாள்; தன் கணவன் நிலையையும் சிந்திக்கின்றாள்.

அருந்து மெல்லடகு ஆர்இட

அருந்தும்என்று அழுங்கும்; விருந்து கண்டபோது என்னுறு

மோஎன்று விம்மும்;

33. விருந்தோம்பல் - அதிகாரத் தலைப்பு விளக்கம் காண்க. 34. சுந்தர. காட்சி - 7