பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 69 உற்சாகமாக இருந்தது. அத்துடன் மூர்த்தியும் இளங்கோவும் சேர்ந்து ஆடியது, ஆட்டம் பார்ப்பதற்கு இன்னும் பரபரப்பாகவும் இருந்தது. இந்த நேரத்தில் தான் இளங்கோ தன் திட்டத்தை செயல்படுத்த நினைத்தான். அவன் திடீரென்று, அடுத்த குழு ஆட்டக்காரரை இடிக்க ஆர்ம்பித்தான். விதிகளுக்கு மாறாக ஆடினால் தவறல்லவா! அதனால், நடுவர் அதைத் தவறு என்று கூறி முதலில் கண்டித்தார். அவன் மீண்டும் மீண்டும் ஒன்றும் தெரியாதவன் போல தவறு செய்யவே நடுவர் தண்டிக்கவும் ஆரம்பித்தார். - உடனே இளங்கோ தன் (5(ԱՔ ஆட்டக்காரர்களிடம் நடுவராகிய உடற்கல்வி ஆசிரியர், வேண்டுமென்றே தனக்கு எதிராக விசில் ஊதுகின்றார் என்று கூற ஆரம்பித்தான். தன் குழுவைத் தோற்கடிக்க ஆசிரியர் முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினான். மற்றவர்களையும் நம்பச் செய்தான். மூர்த்தியிடமும் இதையே கூறினான். அடிக்கடி தவறுக்கு தண்டனை தந்து கொண்டேயிருந்தார் நடுவர். உடனே, இளங்கோ ஒரு முடிவுக்கு வந்தான். நம்மைத்