பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 71 கூறினான். மூர்த்தி முன்னே நடந்தான். அவன் பின்னே மற்றவர்கள் சென்றார்கள் கடைசியாக இளங்கோ வந்தான். தனது திட்டம் பலிக்கப் போகிறது என்று மனதுக்குள்ளே மகிழ்ச்சியடையந்தான். ... " தலைமை ஆசிரியர் முன்னே எல்லா மாணவர்களும் நின்றார்கள். தலைமை ஆசிரியர் கோபமே உருவாக நின்றார். - 'ஒழுக்கம் கற்றுக் கொள்ளத்தான் நீங்கள் பள்ளிக்கு வருகின்றீர்கள். கடமையும் கட்டுப்பாடும் கற்றுக் கொள்ளத்தான் நீங்கள் விளையாடுகின்றீர்கள். ஆசிரியரிடம் பணிவாக நடந்துகொள்ளளாமல், அவமரியாதையாக நடந்து கொள்வதென்றால், உங்களுக்கு இந்த விளையாட்டே வேண்டாம். இனிமேல் நீங்கள் எல்லோருமே விளையாடும் மைதானத்திற்குப் போகவேண்டாம். நீங்கள் இனி எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளக் கூடாது. நீங்கள் போகலாம்." - - ജ്ഞങ്ങഥ ஆசிரியர் கோபமாகக் கூறியதைக் கேட்ட மாணவர்களில் ஒருவன், நாங்கள் விளையாடத்தான் இருந்தோம். எல்லோரும் வெளியே வந்துவிட்டதால், நாங்கள்