பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 73 செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்று கூறிவிட்டு எலியின் ஆவியை விஷ்ணுலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். பலகாலம் விஷ்ணுலோகத்தில் இருந்து மகிழ்ந்த அந்த எலி பின்னர் ஒரு அரசகுமாரியாகப் பிறந்தது. விஷ்ணு கோயிலுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் மிகப் பெரிய பயனை இக்கதை அறிவிக்கிறது. திரேதாயுகத்தில் பூரீதரன் என்ற அரசனும், ஹேமப் பிரபாவதி என்ற அரசியும் சுகமாக வாழ்ந்து வந்தனர். எல்லா சுகம் இருந்தும் தங்கட்குப் பிள்ளை இல்லையே என்ற கவலை வாட்டி வதைத்தது. ஒருமுறை பூரீதரன் வேத வியாசரை சந்தித்துத் தனக்கு ஏன் பிள்ளை இல்லை என்று கேட்டான். உன்னுடைய பூர்வ ஜென்மத்தில் சந்திரன் என்ற பெயருடைய பிராமணனாக வாழ்ந்தாய். இப்பொழுதுள்ள உன் மனைவி, சங்கரி என்ற பெயருடைய உன் மனைவியாக வாழ்ந்தாள். நீங்கள் இருவரும் ஏதோ ஒரு காரியத்திற்காக அவசரமாகப் புறப்பட்டுச் செல்கையில் ஒரு குழந்தை தண்ணிருக்குள் மூழ்கி இறக்கும் நிலையில் இருந்தது. உங்கள் காரியமே முக்கியம் என்று சட்டை செய்யாமல் போனிர்கள். அதனால் இந்த ஜென்மத்தில் உங்களுக்குப் பிள்ளை இல்லாமல் போய் விட்டது என்றார். அதுகேட்ட பூரீதரன் இப்பொழுது என்ன செய்யலாம் என்று கேட்க, பூசணிக்காய், பொன் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் குழந்தை பிறக்கும் என்றார். பூரீதரன் அவ்வாறே செய்து அழகிய பிள்ளை பெற்று வாழ்ந்தான். தருமத்தின் பலன் இது என்று கூறுவது இக்கதை. லக்ஷ்மி விரதத்தின் சிறப்பு துவாபரயுகத்தில் செளராஷ்டிரதேசத்தில் பத்ராஷ்ரவன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி பெயர்