பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாயு புராணம் 151 சொல்லிக் கொடுத்தார். விஷ்ணுவின் சக்கரம் கூடப் பயன் படவில்லை என்று தெரிந்து கொண்டபின் பிள்ளையின் பின்புறம் வந்த சிவன் தன் துலாயுதத்தால் பிள்ளையின் கழுத்தை வெட்டி விட்டார். போர் அமளியில் பிள்ளையின் தலையும் எங்கோ போய் விழுந்து விட்டது. அப்பொழுது பார்வதி மிக்க கோபத்துடன் தன் பிள்ளையைக் கொன்றவர்களை, தான் பார்க்கவோ மன்னிக்கவோ போவதில்லை என்று முடிவு செய்து இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிடத் தயாரானாள். நாரதர் நிலைமையைப் புரிந்துகொண்டு பார்வதியை சமாதானம் செய்து போருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். தாம் விதிக்கும் இரண்டு நிபந்தனைகளுக்குச் சிவன் உட்பட்டால் தன் கோபத்தை அடக்கிக் கொள்வதாகப் பார்வதி கூறினாள். என்ன நிபந்தனைகள் என்று நாரதர் கேட்க, பார்வதி பின்வருமாறு கூறினாள்: 1. என் பிள்ளையின் உயிரைத் திருப்பித் தர வேண்டும், 2. சிவ கணங்கள் அனைத்திற்கும் அவனைத் தலைவனாகச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகளையும் சிவன் ஒப்புக் கொண்டார். முதல் நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. பிள்ளையின் தலை எங்கோ போய்விட்டதால் தேடி எடுக்க முடியவில்லை. உடனே சிவன் தன் உடன் வந்தவனை அழைத்து எந்த ஒரு வடிவத்தை நீ முதலில் சந்திக்கிறாயோ அந்த வடிவத்தின் தலையைக் கொய்து கொண்டு வா என்று கட்டளையிட்டார். அவ்வாறு போன துணைவனுக்கு முதன் முதலில் கிடைத்தது ஒரு யானையின் தலையாகும். அந்த யானையின் தலையை இந்த இளைஞனின் தலையில் பொருத்தி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் கூடி அதற்கு உயிர் உண்டாக்கினர். சிவ புராணத்தின்படி இதுவே கணேசன் பிறந்த கதை.