பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 165 அரக்கர்கள் யாரிடம் போர் புரிந்தாலும் அழிந்து விடுவார்கள் என்று சாபமிட்டார். அரக்கர்கள் பயந்து கொண்டு அமைதியாக இருந்த பொழுது, தேவர்கள் அவர்களைத் தாக்கினர். அசுரர்களுக்கு தர்ம சங்கடம். தேவர்களுடன் போரிட்டால் அழிய நேரிடும். போரிடாவிட்டால் தேவர்கள் கை ஓங்கி விடும். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து தப்பிக்க சமுத்திரத்தில் சென்று வாழ அரக்கர்கள் ஓடினர். ஆனால் கடல் மூலம் பயணம் செய்யும் மக்களைத் துன்புறுத்தினர். ஒருமுறை கப்பலில் சென்ற வைசியனை இவர்கள் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அந்த சுப்ரியா என்ற வைசியன் சிவ வழிபாடு செய்யும் பழக்கமுள்ளவன். எனவே சிறைக்குள் இருந்தபடியே சிவ பூசை செய்தான். இதை அறிந்த அரக்கர்கள் அவன் பூசையைக் கெடுப்பதற்காக அவனைக் கொல்ல பல ஆயுதங்களைப் பயன்படுத்தினர். சிவன் தந்த பாசுபதத்தைக் கொண்டு சுப்ரியா என்ற வைசியன் அரக்கர்களை அழித்தான். வைசியன் வழிபட்ட லிங்கமே நாகேச லிங்கமாகப் போற்றப் படுகிறது. 11. இராமனும் இராமேசுவரமும் இராமன் வானர சேனைகளுடன் இலங்கைமேல் படையெடுத்துச் செல்ல கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். நீர் தாகமெடுத்ததால் குரங்கிடம் சொல்லி தண்ணிர் கொண்டு வருமாறு பணித்தான். தண்ணிர் வந்தவுடன் சிவனுக்குப் படைக்காமல் எதையும் உண்ணாதவனாகிய இராமன், ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதற்கு அந்நீரைப் படைத்தார். வழிபாடு முடிந்ததும், சிவனும் பார்வதியும் தோன்றி இராமனை வாழ்த்தினார்கள். அதே இடத்தில் சிவபெருமான் நிலையாக இருக்க வேண்டுமென்று