பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் - 169 கொண்டிருப்பார்கள். நான் போய் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு நிச்சயம் வருவேன்” என்றது. அவன் தன் வார்த்தையை நம்பவில்லை என்று அறிந்தவுடன் பெண் மான் மீண்டும் வருவதாக சத்தியம் செய்தது. மனமிரங்கிய வேடன் அதனைப் போய் வருமாறு பணித்தான். அந்தப் பெண் மான் சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு பெண் மான் வந்தது. முதல் மானுக்கு நடந்த அனைத்தும் இம்மானிடமும் நடைபெற்றது. இரண்டாம் முறை சிவலிங்கத் திற்கு அபிஷேகம், வில்வார்ச்சனை அவனையுமறியாமல் செய்தான். இந்தப் பெண்மானும் முன்னர் வந்த பெண்மானும் சகோதரிகளாகும். ஒரே ஆண்மானுக்கு இந்த இரண்டு பெண் மான்களும் மனைவியாயிருந்தன. இதற்கு அடுத்தபடியாக ஒர் ஆண் மான் வந்தது. அதே உரையாடல், அதே சக்தியால் மூன்றாம் முறையாக லிங்கத்திற்கு அபிஷேகம், வில்வார்ச்சனை நடைபெற்றது. ஆண் மான் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று மான்களும் தாங்கள் செய்த சத்தியப்படியே வேடனிடம் வந்தன. ஒவ்வொன்றும் அவன் தன்னையே கொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டன. இது போதாதென்று அவற்றின் பிள்ளைகளாகிய மான் கன்றுகள் வந்து தாய் தகப்பனில்லாது நாங்கள் உயிர் வாழ முடியாது. எனவே அவர்களை விட்டுவிட்டு எங்களைக் கொல்லுங்கள் என்று கூறின. வேடன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். அந்த நேரத்தில் அவனையும் அறியாமல் செய்த சிவராத்திரி மூன்று கால பூஜையால் சிவன் வெளிப்பட்டு அவன் குற்றங்களை எல்லாம் மன்னித்து இந்த விநாடி முதல் உன்னுடைய பெயர் குகன் என்று வழங்கட்டும். பரீராமன் இங்கு வரும்பொழுது அவனுக்குத் தோழனாக நீ இருப்பாய் என்று கூறி மறைந்தார்.