பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


XX ஆண்டுகள் என வரும் காலக் கணக்கு நம்மைச் சிந்திக்க வைப்பதாகும். பெளராணிகர்களின் உயர்வு நவிற்சி அணியின் பாற்படுமோ என்றும் நினைக்கலாம். வேதத்தில் மனிதனுடைய ஆயுட்காலம் நூறாண்டுகளாகும் என்று குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் வந்த ஆழ்வாரும் "வேதநூல் பிராயம் நூறு மணிசர்தாம் புகுவரேனும்” என்று பேசுகிறார். எனவே வேதத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற இந்தப் புராணங்கள் ஆயிரம், பதினாயிரம் என்று கணக்குப் போடுவதில் ஏதோ ஒரு புதுமை இருக்க வேண்டும். புராண ஆய்வாளர்கள், வர்ஷ என்ற சொல் இப்பொழுது வருடம் என்பதைக் குறிப்பது போல அக்காலத்தில் ஒரு நாள்ைக் குறித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். எனவே அதை ஏற்றுக் கொண்டால் ஆயிரம் வருடம் என்பது ஆயிரம் நாட்களாகக் குறுகிவிடும். இந்த முறை தவிர வேறு வழியில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மன்வந்திரங்கள் சத்திய, திருத திரேத, கலி இந்த நான்கு யுகங்களுக்கும் சேர்ந்த ஒரு மகாயுகத்திற்கு எல்லை 43,20,000 மனித ஆண்டுகள் ஆகும். இதுபோன்று எழுபத்தியொரு மகாயுகங்களுக்கு 43,20,000 X 71 = 30,ள்,20,000 ஆண்டுகள் ஒரு மன்வந்திரமாகும். இதுபோன்று 14 மன்வந்திரங்களுக்கு, இந்த எண்ணிக்கையை 14ஆல் பெருக்கினால் வரும் ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். இந்த கல்பம் பிரமனுடைய ஒரு நாளாகும். பிரமனுடைய ஒர் இரவும் இதே அளவுள்ள ஆண்டுகளாகும். பிரமனுடைய நாளின் முடிவில், அதாவது 14 மன்வந்திரங்களின் முடிவில் ஒரு மகாபிரளயம் தோன்றுகிறது. அதன்பிறகு பிரமனுடைய இரவு முழுவதும் சூன்யமே நிலவுகிறது. பிரமனுடைய மறுநாள் காலையில் மறுபடியும் உற்பத்தி தொடங்குகிறது.