பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv கிடைக்குமென திரு. குல்கர்னி போன்றவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இந்தக் கால ஆராய்ச்சிக் கற்பனையை ஒதுக்கிவிட்டு, சில சிந்தனைகளைக் கைக் கொள்ளவேண்டும். சில புராணங்கள் சூரிய, சந்திர பரம்பரையைக் கூறும்பொழுது புத்தர்வரை பேசுகிறது. அடுத்தபடியாக கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த திருநாவுக்கரசர் 'இலிங்க புராணத்துள்ளார் என்று சிவனைக் குறிப்பதாலும், கி.பி. ஏழின் பிற்பகுதியில் வாழ்ந்த திருமங்கை மன்னன் 'இலிங்கத்திட்ட புராணத்தீர்' என்று கூறுவதாலும், பெரும்பாலான புராணங்களின் கீழ் எல்லை கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு என்று கருதலாம். இதன் மேல்எல்லை கி.மு. 3 அல்லது 2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். ஏறத்தாழ எல்லாப் புராணங்களிலும் தரும சாஸ்திரங் களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. ஒரு புராணம் தவறாமல் எல்லாவற்றிலும் வர்ணாச்ரமத்திற்குத் தனிச் சிறப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்குத் தொண்ணுற் றெட்டுக் கதைகள் பிராமணர் பற்றியே இருக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நோக்கும் பொழுது பிராமணியம் ஈடுஇணையற்ற செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் இந்த தரும சாஸ்திரப் பகுதி புராணங்களில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையைக் கொண்டு பார்த்தால் குப்தர்கள் காலம் நம் கண்முன் வந்து நிற்கிறது. குப்தர்களுக்கு முற்பட்ட காலத்தில் ஹ-ணர்கள் வடஇந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்து ஆண்டனர். அவர்களுக்குப் பிறகு வந்த குப்தர்கள் ஹ-ணர்களை வென்று அடக்கி இந்து சாம்ராஜ்யத்தை நிலைநாட்டினர். ஹ-ணர்கள் காலத்தில்