பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பதினெண் புராணங்கள் வராது. அதைக் கேளுங்கள் என்று கூறி, சித்ரகேது கதையைச் சொல்ல ஆரம்பித்தார். சுரசேனரால் நிர்மாணிக்கப்பட்ட மதுராபுரியை சித்ர சேனன் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். பல மனைவியரை மணந்தும் அவனுக்குப் புத்திரன் ஒருவன் இல்லாததால் பெருங்கவலையோடு இருந்தான். ஒருமுறை ஆங்கீரச முனிவர் அவன் நாட்டிற்கு வந்தார். அவரை வணங்கி உபசரித்த மன்னன் தன் குறையை எடுத்துக் கூறி ஏதாவது செய்யுமாறு வேண்டினான். ஆங்கீரச முனிவர் ஒரு யாகத்தை நடத்தி அதில் கிடைத்த பாயசத்தை மன்னனின் மூத்த மனைவி யாகிய கிருத்தயுதிக்குக் கொடுத்தார். நாளடைவில் அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றாள். குழந்தை பிறந்ததும் சித்ரகேதுவும், அவன் மனைவி கிருத்தயுதியும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஏனைய அரசிகளும் சந்தோஷப்படுவது போல பாவனை செய்தாலும் உள்ளுக்குள் புழுங்கினர். தங்களுக்குக் கிடைக்காத குழந்தைச் செல்வம் மூத்தவளுக்குக் கிடைத்ததால் அவள் மேலும், குழந்தை மேலும் அதுசையும், பொறாமையும் கொண்டனர். அவர்களுக்குள் சூழ்ச்சி செய்து விஷத்தைக் கொடுத்துக் குழந்தையைக் கொன்று விட்டனர். மன்னனும் அரசியும் அடைந்த துயரத்திற்கு எல்லையே இல்லை. இந்நிலையில் ஆங்கீரச முனிவரும் நாரதரும் அரசரைச் சந்தித்தனர். நாரதர், “அரசே! யாரைக் குறித்து எதற்காக நீ வருந்துகிறாய்? இந்தப் பிள்ளை பிறப்பதற்கு முன் உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? இப்பொழுது இறந்து விட்ட பிறகு உங்களிருவருக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிள்ளையின் ஆன்மா என்றும் அழியாதது. இடையிடையே பிறக்கும் போது எடுக்கின்ற உடல்கள் வெவ்வேறானவை. இந்த உடல்கள்தான் அந்த ஆத்மா என்று நினைப்பது வெறும் மாயையாகும். ஆத்மா அழிவில்லாதது என்றால், அந்த