பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( 7. மார்க்கண்டேய புராணம்) இப்புராணம் பற்றி. மார்க்கண்டேய புராணம். பதினெண் புராண வரிசையில் ஏழாவதாக உள்ளது. அது 9,000 பாடல் களைக் கொண்டது என்று சொல்லப்பட்டிருப்பினும், இன்று கிடைப்பது 6,900 பாடல்களே. மிகப் பழைய முதலாவதாக வைத்து எண்ணாமல், கிருத்திகையை ஒன்று என்று வைத்து எண்ணுகின்ற பழங்காலத்தைச் சேர்ந்தது. பல முக்கியமான பகுதிகளைக் கொண்டது இப்புராணம். இன்று பிரபலமாகச் செய்யப்படுகின்ற சண்டி ஹோமத்திற்கு அடிப்படையாக உள்ள துர்க்கா சப்தசதி என்ற பெயருள்ளதுர்க்கையைப் போற்றும் 700 பாடல்கள் 81ஆம் அதிகாரத்தில் இருந்து 93ஆம் அதிகாரம் வரை உள்ளன. துர்க்கா சப்தசதி மிகவும் சக்தி வாய்ந்த ஒர் அறிவுரையைத் தருகின்றது. இந்த மாபெரும் சக்தியைப் பணிவு, அன்பு, வணக்கம் இவற்றோடு கூடிய மனத்துடன் வழிபட்டால், எத்தகைய துன்பத்தையும் எதிர்ப்பையும் வெல்லும் சக்தியைத் தருகின்றது. அஞ்ஞானம், ஆணவம் முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.