பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் புராணங்கள் “சத்தியம், ஞானம், ஆனந்தம், பிரம்மம் என்ற சுருதி வாக்கியத்தை அடியொற்றி “அது என்றுமுள்ளது, ஆனந்த மயமானது, தூய்மையே வடிவானது, கருணை நிரம்பியது, ஞான வடிவானது என்று பிரம்ம புராணம் பேசுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் தர்மமே என்று பேசுகிறது. இப்புராணம் 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது. லோமஹர்ஷனரே இப் புராணத்தைக் கூறுவதாக பிரம்ம புராணம் தொடங்கு கிறது. பிரபஞ்ச உற்பத்தி நிலைபேறு, அழிவு ஆகிய வற்றை மற்ற புரானங்கள் கூறுவது போலவே பிரம்ம புராணமும் கூறுகிறது. இந்த ஸ்வேத வராக கல்பத்தில் பிருது முதன்முதலில் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் என்ற கதை இப்புராணத்தில்தான் வருகிறது. இந்தப் புராணத்தில் பாரத நாட்டின் வடகோடி யிலிருந்து, தென்பகுதிவரை உள்ள ஆறுகள், தீர்த்தங்கள், புண்ணியத் தலங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவரிப்பதன் மூலம், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு முதன்முதலாக வடிவு கொடுக் கின்றது. கங்கை, கோதாவரி, கோமதி ஆகிய ஆறுகள் நாட்டின் விளைச்சலை அதிகப்படுத்தி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் செயல் விரிவாகக் கூறப்படுகிறது. இந்தப் புராணத்தில், கங்கைச் சமவெளியில் கங்கை நதி பாயுமாறு பகிரதன் செய்த முயற்சியும், இந்தியாவின் தென்பகுதியில் கோதாவரி பாயுமாறு கெளதம முனிவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் இப்புராணத்தில் பேசப் பெறுகின்றன. கோதாவரி