பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/430

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பவிஷ்ய புராணம் 40i ஆகியோருக்குக் கட்டப்படும் கோயில் முறையே வடக்கு கிழக்கு மேற்குத் திசைகளில் அமைந்திருக்க வேண்டும். சிறு தெய்வங் களுக்குக் கட்டப்படும் கோயில் இவற்றைச் சுற்றிக் கட்டப் படலாம். ஒவ்வொரு கோயிலிலும், புராணப் பிரசங்கம் செய்பவருக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். கோயிலுக்குரிய நைவேத்தியம், கோயிலுக்கு வலப்புறம் உள்ள மண்டபத்திலும், மாலை நேர நைவேத்தியம் கோயிலுக்கு இடப்புறம் உள்ள மண்டபத்திலும் செய்யப்பெற வேண்டும். தேவதச்சனான விஸ்வகர்மாவின் கூற்றுப்படி ஒரு கோயிலை 300 வகைகளில் கட்டலாம். அவற்றுள் சில: மேரு அமைப்பு என்பது பல அடுக்குகளையும், பல கோபுரங் களையும் கொண்டது. மந்தர அமைப்பு என்பது பல அடுக்குகளும், ஒரு கோபுரமும் உடையது. கைலாச அமைப்பு இல்லாதது. சமுத்ரா விருந்தா, விருக்ஷா, மிருகசிம்ஹா என்பது வட்டவடிவமானதும், ஒரு அடுக்கும் உடையது. கோபுரம் இல்லாதது. பத்மா என்பது தாமரை வடிவில், ஒரே அடுக்கு உடையது. கருடன் என்பது, இதிகாசத்தில் கூறப்பட்ட கருடன் என்ற பறவை வடிவுடையது. நந்தி என்பது, எருது வடிவில் அமைப்பது. கஜப்பிருஷ்டா என்பது யானையின் பின்பகுதி போன்றது (தூங்கானை மடம்); குஹரஜா என்பது குகை வடிவில் அமைப்பது; ஹம்சா என்பது பறக்கும் அன்னப் பறவை போன்று அமைப்பது: கும்பகட்ட என்பது குட அமைப்பில் கட்டுவது; சர்வடோபாத்ர என்பது ஐந்து அடுக்குகளும், பல கோபுரங்களும், சதுரமான பீடமும் கொண்டது. சதுரஸ்ர வவ்ரிக் ஷத் சதுஷ்கோணா என்பது ஒரே ஒரு கோபுரமும், சதுரமான பீடமும் கொண்டது: அஷ்டக்ஷரா என்பது ஒரே ஒரு அடுக்கும் எட்டு கோணங்களும் கொண்டு அமைப்பது. ஷோடஷாrரா என்பது ஒரே ஒரு அடுக்கும், பதினாறு கோணங்களும் கொண்டு அமைப்பது. ւIւկ.-26