பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/434

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பவிஷ்ய புராணம் 405 பெண்களும் புண்ணியத்தை அடையலாம். இவ்விரதம் இருக்கும் பெண்கள், திருமணமானவர்கள் சிவப்பு ஆடையும், விதவைகள் மஞ்சள் ஆடையும், கன்னிப் பெண்கள் வெண்மையான உடையும் உடுத்த வேண்டும். ஆரண்ய துவாதசி விரதம் இருக்கும் பெண்கள் விஷ்ணுவைத் துதிப்பதாலும், ஏழைகளுக்கு தானம் செய்வதாலும், மோட்சம் அடைகின்றனர். இவற்றை அடுத்து, பவிஷ்ய புராணம் சூரிய தேவனுக்கு உரிய விரதங்கள் பற்றிப் பேசுகின்றது. அவற்றுள் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்: 1. அபயபகூடிசப்தமி விரதம் : சுக்ல பட்சத்தில், ஏழாவது நாள் இவ்வழிபாடு நடைபெறும். சூரிய தேவனைத் துதிப்பதால் தர்மம், செல்வம், மோட்சம் ஆகியவை கிடைக்கும். 2. அபய சப்தமி விரதம் : சுக்கில பட்சம் பதினைந்தாவது நாள், ஆவணி மாதத்தில் இவ்விரதம் அனுஷ்டித்தால், இறந்த பின்பு சூரியனுடைய இருப்பிடம் செல்லலாம். 3. பாத்ர விரதம் : துரிய தேவனின் விக்கிரகத்தை நன்கு தூய்மை செய்து, பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, வணங்கிவர வேண்டும். இவ்விரதம் இருப்போர் பகற் பொழுதில் தூங்குவதோ, துன்மார்க்கர்களிடம் பேசுவதோ கூடாது. இவ்விரதத்தின் பலன் சூரியனுடைய இருப்பிடம் அடையலாம். 4. சப்தமி விரதம் : ஒவ்வொரு மாதமும் ஏழாவது நாள் சூரியனை வணங்கிவந்தால், ஒருவருடைய கடன்பிடி தீரும். சூரியனை வழிபட அனுஷ்டிக்கும் விரதங்களைப் பற்றிப் பேசிய பவிஷ்ய புராணம், இனி மற்ற தெய்வங்களுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் பேசுகிறது. 1. ஆனந்த சதுர்த்தசி விரதம் : சுக்கிலபட்சம் பதினான்காம் நாள், விஷ்ணுவின் விக்கிரகத்தைத் தூய்மைப்