பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/452

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம வைவர்த்த புராணம் 423 தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். செளதி முனிவர், "தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார். இப்புராணம், நான்கு பாகங்களை உடையது. முதல் பாகம் உலக உற்பத்தி, தெய்வங்கள் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஆண் பெண் தெய்வங்களின் இயல்புகள், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. இதே பாகம் சுவர்க்கம், நரகம் ஆகியவைகளின் பல்வேறு பகுதிகளைக் கூறுவதுடன் பல்வேறு நோய்கள், அவற்றைப் போக்கிக் கொள்ளும் வகைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. மூன்றாவது பாகம் கணேசர் என்ற தெய்வத்தின் தோற்றம், அவரைப் போற்றும்