பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 487 அடுத்த கல்பத்தில் தோன்ற வேண்டிய உயிர்கள் அனைத்தும் இருந்ததைப் பிருத்வி கண்டது. வராகத்தின் வயிற்றுள்ளும் அடுத்த கல்பத்தில் வெளிவரவேண்டிய பொருள்கள் அனைத்தும், தொடக்கப் பருவத்தில் இருந்ததைப் பிருத்வி 56.5GTE_JTos. பூமியின் இந்தக் கேள்விகளையும், கேள்விகளைக் கேட்ட பிருத்வியின் மனத் தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றையும் நன்கறிந்திருந்த வராகம் அவள் வினாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விடை கூறத் துவங்கியது. அந்த வினாவும் விடையும்தான் வராக புராணம் எனப் பேசப்படுகிறது. ஏனைய புராணங்களைப் போலவே, வராக புராணமும் பிரபஞ்சப் படைப்பு பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தப் படைப்பின் பின்னணியில் நம் நினைவுக்கப்பாற்பட்ட பரப்பிரம்மம் உள்ளது. இந்தப் பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததாய், எவ்வித மாற்றமும் இன்றி எங்கும் நிறைந் துள்ளதாய் உள்ளது. அப் பரப்பிரம்மம் படைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட மாத்திரையில், வெவ்வேறு பொருள்களாகப் பரிணமிக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அடிப்படையான மூன்று குணங்களும் வெவ்வெறு அளவுகளில் தங்கியுள்ளன. அவை சத்வம், ராஜசம், தாமசம் என்று கூறப்படும். ஆதியில் எங்கும் சூனியம். அந்தச் சூனியத்திலிருந்து ஆதி நாதம் தோன்றியது. நாதத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்தினின்று காற்று, காற்றிலிருந்து நெருப்பு நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி முதலியவை தோன்றின. இந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் எல்லா உயிர்களும் வாழும் எல்லா வகை உடம்புகளும் படைக்கப்பட்டன. இந்த உயிர்கள் அனைத்தும் வாழக்கூடிய இடமாக பூமியை ஏற்பாடு செய்து, அந்த