பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 23 மார்க்கண்டேயர் யுக முடிவில் அண்டம் முழுவதையும் நெருப்பு சூழத் துவங்கி அனைத்தையும் எரித்துவிட்ட நிலையில், மார்க்கண்டேய முனிவர் மட்டும் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்யும் நிலையில் இருந்து வந்தார். யுக நெருப்புக் கூட அவரை அண்ட முடியவில்லை. ஆனால் கண்விழித்த பொழுது அனைத்தும் அழிந்திருப்பதையும் ஒர் ஆலமரம் மட்டும் தனித்து நிற்பதையும் பார்த்து மரத்தினடியில் அமர்ந்து விஷ்ணுவை தியானம் செய்தார். அதன் பயனாக இப் பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை பன்னிரண்டு வருடங்கள் விடாது பெய்தது. இப்பொழுது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம். நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில் பாலகன் ஒருவன் படுத்திருக்கக் கண்டார். அப்பாலகனின் ஆணையின்படி அவன் வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர். பாலகன் வயிற்றினுள் அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பது கண்ட மார்க்கண்டேயர் வெளியே வந்து விஷ்ணுவை துதித்துக் கொண்டு பல்லாண்டுகள் அவருடனேயே இருந்தார். அவர் தவத்தை மெச்சிய விஷ்ணு, அவர் வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினார். உடனே மார்க்கண்டேயர் புருஷோத்தம rேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும். மக்கள் மனத்தில் அரியும் சிவனும் ஒன்று என்ற எண்ணம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விஷ்ணுவும் அதற்கிசையவே சிவபெருமானுக்கு “புவனேஷ்வர்” ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. ஸ்வேதா என்ற நேர்மையுள்ள அரசன் ஜகந்நாதர் ஆலயத்திற்கு அருகில் ஸ்வேத மாதவன் என்ற பெயருடைய விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார்.