பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 509 கூறும்பொழுது, அவை சிறப்பான பலன்களைப் பெறுகின்றன என்றார். பிரதிபாதா சுக்கிலபட்சம் முதல் நாள் பிரதிபாதா எனப்படும். இது அக்னி தேவனுக்குரிய நாள் ஆகும். பிரபஞ்ச உற்பத்தியின் போது, பிரம்மா தன்னுடைய கோபக்கனலில் இருந்து அக்னி தேவனை உருவாக்கினார். ஆகையால் அக்னியைத் தொழுவதற்கு இது உகந்த நாள். துவிதியை சுக்கிலபட்சம் இரண்டாம் நாள் துவிதியை எனப்படும். இந்நாளில் அஸ்வினிகள் எனப்படும் தேவதைகளைத் தொழவேண்டும். குதிரையாகவும், பெண் குதிரையாகவும் இருந்த சூரியனுக்கும், சம்ஜனாவிற்கும் பிறந்த மக்கள் நதத்யா, தசரா. இவர்களின் பெற்றோர்கள் குதிரை வடிவில் இருந்த பொழுது இவர்கள் பிறந்ததால், அஸ்வினிகள் என்று அழைக்கப் பட்டனர். திரிதியை மூன்றாம் நாள் திரிதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் ருத்ரனுக்கு ஏற்ற நாள். இந்நாளில் கடைப் பிடிக்கப்படும் விரதம், திருமணமான தம்பதியருக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும். பிரம்மன், ருத்ரனைத் தோற்றுவித்து, உற்பத்தித் தொழிலைப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறினார். ருத்ரன் தன்னால் இயலாது எனக் கூறவும், அவனை நீருக்கடியில் ஆயிரம் வருடங்கள் தியானம் செய்து சக்தியைப் பெருக்கிக்