பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பதினெண் புராணங்கள் எவ்வளவோ நன்மைகள் செய்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். உங்களுடைய வாகனம் நான். நீங்கள் அசுரர்களுடன் போரிட வேண்டுமானால் என்மேல் ஏறிக் கொண்டுதான் போர் செய்கிறீர்கள். நான் இல்லையானால் உங்களால் போர் செய்யவே முடியாது” என்று கூறினான். உடனே விஷ்ணு, "நீ சொல்வது உண்மைதான். என்னுடைய பாரத்தைச் சுமக்கின்ற நீ பெரியவன்தான். இதோ பார். என்னுடைய சுண்டு விரலை உன் தலையில் வைக்கிறேன். அதை எவ்வளவு எளிதாகச் சுமக்கிறாய் என்று பார்க்கலாம்” என்று கூறி விஷ்ணு தன் சுண்டு விரலைக் கருடன் தலையில் வைத்தவுடன் கருடன் தலை நசுங்கியதுடன் உடலும் நசுங்கி விட்டது. கருடன் உடனே தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். விஷ்ணு விரலை எடுத்தவுடன் கருடன் தலைப்பாரம் குறைந்ததே தவிர நசுங்கிய தலையும், உடலும் பழைய நிலைக்கு வரவே இல்லை. அவன் வருந்திய பொழுது, “நீ சிவனிடம் சென்று முறையிடு. உன் குறையைத் தீர்ப்பார்” என்று கூறினார். கருடன் சிவனிடம் சென்ற பொழுது அவர் கருடனை கெளதமி கங்கையில் 15 நாள் மூழ்கி எழுமாறு கூறினார். அதனால் அவன் பழைய உடல் வந்தது. மணிநாகமும் விடுதலை பெற்றான். அப்பகுதி இதனால் கருடதீர்த்தம் என்று பெயர் பெற்றது. விசுவாமித்திர தீர்த்தம் ஒரு காலத்தில் நாடு முழுவதும் பயங்கரமான பஞ்சத்தின் பிடியில் சிக்கியது. விசுவாமித்திர முனிவர், அவர் குடும்பத்தார், சீடர்கள் அனைவரும் எத்தகைய உணவும் கிடைக்காமையால் வாடி வதங்கினர். விஸ்வாமித்திரர் தன் சீடர்களைப் பார்த்து எங்காவது தேடிச் சென்று ஏதாவது கிடைத்ததைக் கொண்டு வருக என்று கூறினார். தேடிச் சென்றவர்கள் வேறு ஒன்றும்