பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/578

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்கந்த புராணம் : 549 அப்படியே எடுத்துக் கொண்டு. அந்தப் புராணங்களில் கிருஷ்ணன் முதவியவர்கள் போர் செய்தார்கள் என்று கூறுவதற்கு பதிலாக ஸ்கந்தன் போர் செய்தார் என்று ஸ்கந்த புராணம் பேசுகிறது. அது மட்டுமல்லாமல் மகிஷாசுரன் கதையைச் சொல்வி அவனையும் முருகன்தான் வென்றார் என்று ஸ்கந்த புராணம் பேசுகிறது) சுவேதாவின் கதை சுவேதா என்ற மன்னன் சிறந்த சிவ பக்தன். சிவ பூஜையிலும், தியானத்திலும் பெரும் பொழுதைக் கழிக்கும் அவன் இறுதிநாளும் வந்தது. யமபடர்கள் அவனை அழைத்துப் போக வந்தனர். ஆனால் அவன் கோயிலுக்குள் தியானத்தில் அமர்ந்திருந்தான். ஆனால் யமபடர்கள் கோயிலுக்குள் செல்ல அஞ்சி வெளியே நின்றனர். அவர்கள் வராதது கண்ட யமன் தானே அங்கு வந்து சேர்ந்தான். கடமையைச் செய்யாத யம படர்களைக் கண்டித்து விட்டு உள்ளே சென்று சுவேதாவின் ஆவியைப் பறிக்கப் போனான். ஆனால் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து யமனை எரித்து விட்டார். இதுவரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த சுவேதா நடந்தவற்றை அறியவில்லை. இந்தக் களேபரத்தில் கண்விழித்த சுவேதா நடந்ததை அறிந்து சிவனிடம் ‘ஐயனே! தாங்கள் செய்தது முறையா? எல்லோருடைய காலத்தையும் கணக்கிட்டுக் கொண்டு போவதால் தானே இவனுக்குக் காலன் என்ற பெயர் வந்தது. அவன் கடமையை அவன் செய்ததற்காக அவனை எரிக்கலாமா? காலன் இல்லாத உலகம் பயங்கரமாகப் பெருகிக் கொண்டே போய்விடும். தயவுசெய்து அவனை எழுப்பி அவன் கடமையைச் செய்யுமாறு பணிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். சிவனும் சிரித்துக் கொண்டே யமனை எழுப்பி விட்டார். காலன் சுவேதாவிற்கு நன்றி பாராட்டிவிட்டுச் சென்றார். தமிழ் நாட்டில் இக்கதை