பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 பதினெண் புராணங்கள் என்பனவாம். அர்ச்சுனன் சென்ற பொழுது இந்தத் தீர்த்தங்களில் யாருமே இறங்கிக் குளிக்காமல் அவற்றை ஒதுக்கிச் சென்றதைக் கண்டான். சில முனிவர்களைப் பார்த்து ஏன் எல்லோரும் இந்த ஐந்து தீர்த்தங்களை ஒதுக்கி விடுகிறார்கள் என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர்கள், "இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஐந்து பெரிய முதலைகள் உள்ளன. யார் இதில் இறங்கினாலும் அவர்கள் மீள்வதே இல்லை. நீயும் இதனை ஒதுக்கிவிட்டுச் செல்வது நலம்" எனறாாகள. மாவீரனாகிய அருச்சுனனுக்கு இது பிடிக்கவில்லை. எனவே துணிந்து தீர்த்தத்தில் இறங்கினான். ஒரு முதலை வந்து அவன் காலைக் கவ்விக் கொண்டது. பெரு வீரனாகிய அருச்சுனன் அந்த முதலையையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கரையேறிவிட்டான். கரைக்கு வந்ததும் முதலையின் வடிவம் மாறி ஓர் அழகிய அப்ஸ்ரஸ் நின்றாள். வியப்படைந்த அருச்சுனன் நீ யார் என்று கேட்க, அப்பெண் தன் வரலாற்றைச் சொல்லத் துவங்கினாள். நாங்கள் ஐவர் அப்ஸரஸ் பெண்கள். எங்கள் அறியாமை காரணமாக தவத்தில் ஈடுபட்டிருந்த ஒரு முனியின் தவம் கலையுமாறு துன்புறுத்தினோம். தவம் கலைந்த அவர் எங்கள் மேல் கடுஞ்சினம் கொண்டு முதலைகளாகப் போகக் கடவீர் என்று சாபமிட்டார். நாங்கள் வருந்தி மன்னிப்புக் கேட்டவுடன், எப்பொழுது ஒரு வீரன் உங்களைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கிறானோ அப்பொழுது உங்கள் சாபம் நிவர்த்தியாகும் என்று கூறினார். உம்முடைய தயவால் நான் விடுதலை அடைந்து விட்டேன். என் தோழிகள் நால்வரையும் விடுதலை செய்து தரவேண்டும் என்று அப்பெண் சொல்ல, எஞ்சிய நால்வரையும் அருச்சுனன் விடுவித்தான்.