பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/602

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்கந்த புராணம் 573 யாராவது நீர் கொடுங்கள் என்று கேட்டான். இந்தக் குரலைக் கேட்ட அரசன் அசோகனைப் பார்த்து நீ கொஞ்சம் தண்ணர் கொடுத்து வா’ என்றான். கழுமரத்தில் இருந்தவன் பக்கம் தண்ணிருடன் சென்ற அசோகனுக்கு அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்ச்சி அங்கே நடந்தது. அழகிய பெண் ஒருத்தி அவன் எதிரே வந்து, இக்கழுமரத்தில் தொங்குபவன் என் கணவன். இவனுக்குத் தண்ணீர் கொடுக்கும் உரிமை எனக்குத்தான் என்றாள். அசோகன் குவளையை அவளிடம் கொடுத்து, நீங்களே கொடுங்கள் என்றான். தொங்குபவன் உயரத்திற்கு என்னால் எட்ட முடியவில்லை என்றாள் அவள். உடனே அசோகன், கவலை வேண்டாம். நான் குனிந்து கொள்கிறேன். என் முதுகின் மேல் ஏறி உன் கணவனுக்கு தண்ணிரைக் கொடுங்கள் என்று கூறிக் குனிந்து கொண்டான். அந்தப் பெண் அவன் மேல் ஏறினாள். சிறிது நேரம் கழித்து அசோகன் முதுகில் சூடான இரண்டு சொட்டு இரத்தம் விழுந்தவுடன் திடீரென்று நிமிர்ந்து பார்த்தான். வந்தவள் பெண்ணல்ல என்பதும், ஒரு பேய் என்பதும், கழுமரத்தில் தொங்குபவனுடைய சதைகளைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்ததைக் கண்டான். தன் வலுவான கைகளால், கொலுசு அணிந்திருந்த அப் பெண்ணின் காலைப் பிடித்து இழுத்தான். அப்பெண் பேய், காலில் இருந்த கொலுசை இவன் கைகளில் விட்டுவிட்டு தழுவி விட்டது. கொலுசுடன் சென்று, துரத்தில் நின்ற மன்னனைக் கண்டு நடந்தவற்றை விவரித்தான் அசோகன். மிக்க மகிழ்ச்சி அடைந்த மன்னன் அசோகனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தான். அந்த ஒற்றைக் கொலுசு, தேவலோக வேலைப் பாடுகளுடன் அமைந்திருந்ததால் அது போன்று மற்றொரு கொலுசை அடைய மன்னன் விரும்பினான். அசோகன் அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்தான். நிணம், சதைத்