பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/606

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்கந்த புராணம் 577 இதன் பிறகு சிவன் ஸ்கந்தனிடம் தர்மாரண்யம் பற்றிச் சொல்லி விஷ்ணுவுக்கு அதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றி விளக்கினார். விஷ்ணு தலை இழந்த கதை வேதவியாசர் யுதிஷ்டிரனுக்கு மற்றொரு கதையும் சொன்னார். ஒருமுறை தேவர்கள் ஒரு பெரிய யாகத்தைச் செய்ய விரும்பினார்கள். விஷ்ணுவை அந்த யாகத்திற்கு அழைக்க வேண்டும் என்று எண்ணிய தேவர்கள் மேல் உலகம், கீழ் உலகம் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினார்கள். கடைசியாகத் தன்னுடைய வில்லை வளைத்துக் குறிபார்க்கும் நிலையில் விஷ்ணு தவம் செய்து கொண்டிருந்தார். அவரை எப்படியாவது எழுப்ப வேண்டும் என்று நினைத்தனர். வளைத்து நாண் ஏற்றியிருந்த வில்லில் உள்ள நாண் கயிற்றை அறுத்தால் வில் போடும் சத்தத்தில் விஷ்ணு எழுந்துவிடுவார் என்று நினைத்துக் கயிற்றைத் தின்னக்கூடிய ஒரு பூச்சியை விஷ்ணு வைத்திருந்த வில்லினுடைய நாணில் விட்டனர். அந்தப் பூச்சி அந்த நாணைத் தின்றவுடன் வளைந்திருந்த வில் விடுபட்டது. தேவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அவர் முகத்திற்குக் கீழே வில் இருந்ததால் அது விடுபட்டதும் அவருடைய தலையை வெட்டி விட்டது. வெட்டப்பட்ட தலை சுவர்க்கத்தை நோக்கிச் சென்றது. இப்படி விஷ்ணுவின் தலை வெட்டப்படுவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஒருமுறை பிரம்மாவின் சபையில் விஷ்ணுவும் இருக்கும் பொழுது, அவருள் யார் பெரியவர் என்ற வினா பிறந்தது. இதில்போய்த் தெரியவேண்டியது ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் படைக்கின்றவன் நான்தான். ஆகவே நான்தான் பெரியவன் என்றார் பிரம்மன். விஷ்ணு “தேவையில்லாமல் அகங்காரம் கொள்ளாதே. இந்த அண்டம் цц.—37