பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 பதினெண் புராணங்கள் பிரகலாதன் தன்னுடைய படைகளுடன் நைமிச தீர்த்தத்தில் நீராடப் போனான். அங்கே அவனுக்கொரு அதிசயம் காத்திருந்தது. தீர்த்தக் கரையில் உள்ள பெரிய மரம் ஒன்று ஒரு எள்முனைகூட இடமில்லாமல் அடிமரத்திலிருந்து நுனி மரம் வரை அம்புகள் துளைக்கப்பட்டிருந்தது. ஆயிரக் கணக்கான அம்புகள் ஒவ்வொரு பகுதியிலும் குத்திக்கொண்டு அப்படியே நின்றிருந்தன வியப்புத் தாங்காத பிரகலாதன், சுற்று முற்றும் பார்க்கையில், பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பதையும், இருவருடைய பக்கத்திலும் இரு மிகப்பெரிய வில்களும் அம்புகள் நிறைந்த இரண்டு அம்பறாத்துணிகளும் இருக்கக் கண்டான். தவசிகள் வில்லையும், அம்பையும் வைத்திருப்பது பொருத்தமில்லாத செயல் என்று கருதினான் பிரகலாதன். எனவே அவர்களிடம் வந்தான். நாராயண முனிவரைப் பார்த்து, "அம்பையும், வில்லையும் வைத்திருக்கும் நீங்கள் போலித்துறவிகள் என்பதில் ஐயமில்லை. தவம் செய்கின்ற இடத்தில் வில்லுக்கும், அம்புக்கும் என்ன வேலை? நீங்கள் யார்?' என்று கேட்டான். முனிவர் அவனைப் பார்த்து, நாங்கள் யாராயிருந்தால் உனக்கென்ன? என்று கூற, பிரகலாதன் நான் அரசன், இப்படிப்பட்ட போலித் துறவிகளைத் தண்டிக்க வேண்டியது என் கடமை என்றான். உடனே நர முனிவர் வில்லை எடுக்க பெரும் போர் மூண்டது. பிரகலாதன் எய்த எல்லா பானங்களையும் நர முனிவரின் பாணங்கள் செயலிழக்கச் செய்தமையால், பிரகலாதன், இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர் என்று தெரிந்துகொண்டு சிறப்பு மிகுந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினான். நர முனிவர் மிக எளிதாக நாராயணாஸ்திரத்தை ஏவி அதனைத் தடை செய்தார். பிரகலாதன் அக்னியாஸ்திரத் தையும், முனிவர் மஹேஸ்வராஸ்திரத்தையும் பயன்படுத்தினர்.