பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 599 மான்களின் மேலும் ஏறிவந்தனர். சந்திரன் அன்னங்கள் பூட்டிய ரதத்தில் வந்தான். அந்தகன் குதிரை மேலும், விரோச்சனன் யானை மேலும், அயாசங்கு என்பவன் சிங்கத்தின் மேலும் வந்தனர். போர் தொடங்கியது. இந்திரன் முதலியவர்கள் அடி பொறுக்காமல் ஒடத் தொடங்கினர். விரைவில் தேவருலகம் அந்தகன் வசமாயிற்று. அந்தகன் தலைநகரம் அஷ்மகா எனப்படுவதாகும். மகிஷாசுரன் முன்னொரு காலத்தில் ரம்பன், கரம்பன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்து கொண்டு மூன்று உலகத்திற்கும் பெருந் தீமை புரிந்து வந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற பெருங்கவலை இருந்து வந்தது. இருவரும் தவம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கரம்பன் என்பவன் தண்ணிருக்கு அடியில் சென்று தவம் செய்தான். அதனை அறிந்த இந்திரன் முதலை வடிவில் சென்று கரம்பனை விழுங்கிவிட்டான். தம்பி இறந்ததை அறிந்த ரம்பன் இந்திரன் மேல் கடுங்கோபம் கொண்டான். இந்திரனை அழிக்கக் கூடிய ஒரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினான். தவம் செய்தான். தவத்தின் முடிவில் யாரும் வராததால் தன் தலையை அறுத்து அக்னிக் குண்டத்தில் போடுவதற்காகக் கையில் வாளை எடுத்து விட்டான். உடனே அக்னி தேவன் அவன் முன் தோன்றி, "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். உனக்கு வேண்டிய வரத்தைத் தருகிறேன்” என்று கூறியவுடன் ரம்பன் "எனக்கு ஒரு மகன் வேண்டும். மூன்று உலகத்தையும் வெல்பவனாகவும் மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் யாராலும் கொல்லப் படாதவனாகவும் இருக்க வேண்டும்.” என்றான். அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு அக்னி மறைந்தான்.