பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 605 என்ற இடமும், கிழக்கே கயாவும், தெற்கே விராஜாவும், மேற்கே புஷ்கராவும், நடுவே பிரயாகையும் அந்த இடங்களாகும். குரு, சமந்தபஞ்சகம் என்ற இடத்தில், பொன்னாலாகிய ஏரினைப் பூட்டி நிலத்தினை உழ ஆரம்பித்தான். அப்பொழுது இந்திரன் வந்து இந்த இடத்தை ஏன் உழுகிறாய்? என்றான். குரு, இங்கே நிலத்தை உழுது, நற்பண்புகளை விதைக்கப் போகிறேன்' என்று கூறினவுடன் இந்திரன் போய்விட்டான். குரு நிலத்தை உழுதுகொண்டே இருந்தான். விஷ்ணு அங்கே வந்து நிலத்தை ஏன் உழுகிறாய் என்று கேட்க, குரு அதே விடையைக் கூறினார். என்ன விதை வைத்திருக்கிறாய்? எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்க, குரு என் உடலில் இருக்கிறது என்றான். என்ன விதைகள் என்று விஷ்ணு கேட்க, "தியானம், சத்தியம், இரக்கம், தூய்மை, மன்னித்தல், தானம் செய்தல் ஆகியவையே அந்த விதைகள்” என்று குரு கூற, விதை எங்கே என்று விஷ்ணு கேட்க, குரு தன் வலக்கையை நீட்டினான். அவன் வலக்கையை ஆயிரம் துண்டுகளாக வெட்டி, உழப்பட்ட வயல்களில் விதைத்துக் கொண்டே வந்தார். அதேபோல அவன் இடக்கை, இரண்டு தொடைகள் ஆகியவற்றை வெட்டி விதைத்த பிறகு அவன் தலையையும் வெட்டக் கொடுத்தான். அப்பொழுது விஷ்ணு அவனைத் தடுத்து 'உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, குரு, பெரும்பகுதி நிலத்தை உழுதுவிட்டேன். வரம் தருவதானால் இந்த இடம் சிறந்த புண்ணிய rேத்திரமாக விளங்கட்டும் என்று வேண்டிக் கொண்டான். விஷ்ணுவும் அப்படியே ஆகட்டும். இந்தப் புண்ணிய பூமிக்கு இன்று முதல் குருக்ஷேத்திரம் என்ற பெயர் வழங்கட்டும் என்றார். இந்தப் புண்ணிய பூமியின் பக்கத்தில் பிருதுதாகா என்ற ஆறு ஒடுகிறது. அந்தத் தீர்த்தக் கரையைத்தான் பிதுர்க்களை வணங்கி, மேனகாவை அழைத்து வரவேண்டிய இடம்