பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/636

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


608 பதினெண் புராணங்கள் விலையுயர்ந்த பொருள்களைத் திருடியதால் இந்த ஜென்மத்தில் நாயாகப் பிறந்திருந்தான். அந்த நாய் சரஸ்வதி முதலிய தீர்த்தங் களில் குளித்துவிட்டு இப்பொழுது குருக்ஷேத்திரத்தில் உள்ள ஸ்தானு தீர்த்தத்திற்கு வந்தது. ஆனால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நாயை வெனா அன்புடன் தடவிக் கொடுத்தான். அந்த நாய் முன்னரே பல தீர்த்தங்களில் குளித்திருந்ததால் அதில் கிடைத்த புண்ணியம், வெனாவிற்கு வர, வெனா தன் பாவங்களினின்று விடுபட்டான். இதன் பிறகு வெனா சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். மகிழ்ச்சி அடைந்த சிவன், வெனா எதிரே தோன்றி, "தவத்தை மெச்சினேன். என்னுடன் வந்து இரு. ஆனால் நீ செய்த பாவங்களின் பலனை நீ அனுபவித்துத்தான் தீர வேண்டும். அந்தகாசுரன் என்ற அசுரனாக நீ பிறப்பாய். உன்னை நான் வந்து கொல்லும் பொழுது உன் பாவங்கள் முற்றிலும் தீர்ந்து நீ விடுதலை அடைவாய்” என்று கூறினார். சிவ - உமா திருமணம் விஷ்ணுவின் ஆணைப்படி தேவர்கள் முன்னோர் களைக் குறித்துத் தவம் செய்ய முன்னோர்கள் மேனகாவைத் தந்தனர். மேனகாவை மணந்த இமவான் மூன்று பெண்களைப் பெற்றான். மூன்று பெண்களில் யார் சிவனை மணக்கத் தகுதியுள்ளவள் என்பதை அறியாத தேவர்கள் முதலில் முதல் பெண் குடிலாவை பிரம்மனிடம் அழைத்துவர, இவள் சிவனுக்கு ஏற்றவள் அல்லள் என்று பிரம்மா கூறினார். அவள் கோபித்து பிரம்மனை வசைபாட, ஆறாகப் போவாய்' என பிரம்மா சபித்தார். இரண்டாவது பெண்ணாகிய ராகினியை அழைத்து வர, முன்போலவே அவளும் பிரம்மன் சாபத்தினால் மாலை நேரமாக மாறிவிட்டாள். மூன்றாவது பெண்ணை அழைத்து வாருங்கள் என்று பிரம்மன் கூற, தேவர்கள்