பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/648

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


620 பதினெண் புராணங்கள் விஷ்ணுவும் சிவனிடம் வேண்டித்தான் தனக்குத் தேவையான வற்றைப் பெற்றார். இதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று கூறினார். வெகு காலத்திற்கு முன்பு பூரீதமா என்ற அசுரன் இருந்தான். அவன் விஷ்ணுவையே வென்று விடுவதாக பயமுறுத்தி வந்தான். விஷ்ணுவும் உடனே சிவனிடம் சென்று வேண்ட, சிவபெருமான் சுதர்சன சக்கரத்தைக் கொடுத்தார். அதைக் கொண்டு விஷ்ணு தன் எதிரிகளை சுலபமாக அழித்துவிட முடியும் என்றும் கூறினார் சிவபெருமான். உடனே விஷ்ணு, சிவபெருமானே! நீர் சொல்வது உண்மை தான் என்று எப்படி நான் தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் உம்மையே முதலில் சோதித்துப் பார்க்கிறேன் என்று கூறி, சக்கரத்தை ஏவிவிட, சக்கரம் சிவன் உடம்பை மூன்று கூறுகளாகப் பிரித்தது. அவை ஹிரண்யக்ஷா, சுவர்ணக்ஷா, விஸ்வருபக்ஷா என்ற பெயருடன் அனைவ ராலும் வணங்கப் பெற்றது. சிவபெருமான் அழிக்க முடியாதவர் என்பது ஐயத்திற்கு இடமின்றித் தெரியு மாதலால், சக்கரம் உண்மையில் சிவபெருமானுக்கு எந்தத் துன்பத்தையும் இழைக்கவில்லை. விஷ்ணு, சிவபெருமானைச் சந்தேகப்பட்டதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டார். பிறகு சக்கரத்தைக் கொண்டு பூரீதமாவை வென்றார். உபமன்யுவின் வேண்டுதலில் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு என்றென்றும் பால் கிடைக்க அருள்புரிந்தார். நிஷாகரா முன்னொரு காலத்தில் கோஷகரா என்றொரு பிராமணன் வசித்து வந்தான். அவன் மனைவி பெயர் தர்மிஷ்டா. இவர்களுக்குக் கண் தெரியாத, வாய் பேசாத